இந்த 3 பேர் தான் இப்ப கிங்! ஓலா இருந்த இடமே தெரியல! எவ்வளவு விக்குறாங்க தெரியுமா?

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட் மிகப்பெரிய போட்டியை சந்தித்து வருகிறது இது புதிய கட்டத்தை எட்டியுள்ளது என சொல்லலாம் 2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் எலக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது நீண்ட காலமாக வாகனம் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் முன்னணி இடத்தை பிடித்துள்ளன ஆரம்ப கட்டத்தில் இந்த செக்மெண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது பாரம்பரிய நிறுவனங்கள் முன்னணிக்கு வந்துள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் ஜேடோ டைனமிக்ஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் விற்பனையான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை விபரங்களை ஒப்பிட்டு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன டூவீலர் விற்பனையில் பாரம்பரிய நிறுவனங்கள் தான் 60% பங்கு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது அதாவது கடந்த ஜனவரி மாதம் விற்பனையாளர் விற்பனை வைத்து பார்க்கும் போது 100 எலக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையாளர் 60 டூவீலர்கள் பாரம்பரியமான நிறுவனங்களின் தயாரிப்பாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Electric 2W Sales

இந்த அதிகரிப்புக்கு முக்கியமான மூன்று நிறுவனங்கள் டிவிஎஸ் பஜாஜ் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் தான் இந்த நிறுவனங்கள் தான் அதிக அளவிலான எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து ஒட்டுமொத்த எலக்ட்ரிக் வாகன விற்பனையில் 60% பங்கு வைத்துள்ளது இதற்கு முக்கியமான காரணம் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் தேசிய அளவில் டீலர்ஷிப்புகள் உள்ளன. இதனால் இந்த நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளை தேசிய அளவில் உடனடியாக விற்பனை செய்ய முடிகிறது.

இது மட்டுமல்ல இது நிறுவனம் ஏற்கனவே தயாரிப்பில் நல்ல அனுபவம் பெற்ற நிறுவனம் என்பதால் இந்நிறுவனம் சுலபமாக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்கப்படுகிறது .மேலும் தயாரிப்பு வேகமாக இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால் மிக வேகமாக இந்நிறுவனம் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. போட்டி நிறுவனங்கள் பெரிய அளவுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் தயாரித்து பெரிய அளவில் விரிவு படுத்த முடியவில்லை. இதனால் விற்பனை அதிகமாக இருந்தாலும் அந்த அளவுக்கு தயாரிப்பை கொண்டு வர முடியவில்லை.

Electric 2W Sales

அதே நேரத்தில் வாடிக்கையாளர்களும் பல்வேறு விதமாக தங்களை மாற்றிக்கொள்ள துவங்கி விட்டனர் முக்கியமாக புதிய அம்சங்கள் விலை வாகனத்தின் சர்வீஸ் நம்பகத்தன்மை என பல்வேறு விஷயங்களை கண்காணிக்கிறார்கள் இது எல்லாம் சேர்ந்துதான் பாரம்பரியமான நிறுவனங்களை நோக்கி அவர்களை இழுத்து வரத்து வாங்கியுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூரில் தான் தனது தயாரிப்பாளையை வைத்துள்ளது இந்நிறுவனம் தற்போது ஐ க்யூப் மற்றும் ஆர்பிட்டராகிய இரண்டு விதமான எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இது பல்வேறு வாடிக்கையாளர் செக்மெண்ட்களை குறி வைத்து விற்பனை செய்யப்படும் வாகன தயாரிப்பாகும் இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலா ஆண்டில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து சாதனை உள்ளது.

Electric 2W Sales

இதில் பஜாஜ் நிறுவனத்தை நாம் பாராட்டியாக வேண்டும் இந்நிறுவனம் ஒரு கட்டத்தில் பேட்டரி தயாரிப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது வாகனங்களுக்கான பேட்டரியை பொருத்துவதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது அதையெல்லாம் மீறி தற்போது தனது தயாரிப்பை விரிவு படுத்தி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து பஜாஜ் செய்த என்ற பெயரில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

பாரம்பரிய நிறுவனங்கள் வளர்ந்து வரும் நிலையில் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எல்லாம் இதில் திண்டாடிதான் வருகிறது ஏத்தன் நிறுவனம் மட்டுமே கடந்த காலாண்டில் ஓரளவு நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது இதற்கு அந்நிறுவனத்தின் ரெஸ்ட்டா என்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதே நேரம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மிகப்பெரிய அளவில் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது இதற்கு இந்நிறுவனத்தின் கட்டுமானம் மற்றும் சர்வீஸ் குறித்து மக்களுக்கு மத்தியில் மோசமான அனுபவம் கிடைத்ததாக கூறப்படுவதன் காரணமாக விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எது எப்படியோ வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பை நோக்கி தங்கள் பார்வையை அகற்றி வருகின்றனர் இதனால் எதிர்காலங்களில் மிகப்பெரிய அளவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சியை சந்திக்க நேரிடும் மேலும் தயாரிப்பில் மற்ற நிறுவனங்களும் புதிய ஸ்டார்ட் ஆகும் இணைய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது எதிர்காலங்களில் டூ விலகல் என்றாலே எலக்ட்ரிக் டூவீலர்கள் தான் என்ற நிலைமை மாற வெகு தொலைவு இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 17, 2026, 17:45 [IST]
English summary
Tvs bajaj hero dominate e scooter market 60 percent share
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X