சிங்கிள் சார்ஜில் 212 கிமீ ஓடும்! வெறும் 59 ஆயிரத்துக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இந்தியாவையே மிரள விட்ட டிவிஎஸ்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooter) ஒன்று டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube). கடந்த 2020ம் ஆண்டு டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் தற்போது மிகவும் முக்கியமான மைல்கல்லை டிவிஎஸ் ஐக்யூப் கடந்துள்ளது.
1 மில்லியன் (10 லட்சம்) ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று 10 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்திருப்பது மிகவும் சிறப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. 10 லட்சமாவது டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் இதுவரை ஒட்டுமொத்தமாக 14.94 பில்லியன் கிலோ மீட்டர்கள் ஓட்டியுள்ளனர். இதன் மூலம் 5,22,969 டன்கள் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. இது 20.9 மில்லியன் (2.90 கோடி) மரங்களை நடுவதற்கு சமமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஸ்டாண்டர்டு, எஸ் மற்றும் எஸ்டி ஆகியவை ஆகும். இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் மொத்தம் 3 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. அவை 2.2 kWh, 3.1 kWh மற்றும் 3.5 kWh ஆகியவை ஆகும்.

அவற்றின் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) முறையே 94 கிலோ மீட்டர்கள், 123 கிலோ மீட்டர்கள் மற்றும் 145 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. அதே சமயம் அவற்றின் விலை முறையே 1,12,920 ரூபாய், 1,28,449 ரூபாய் மற்றும் 1,36,099 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ் வேரியண்ட் ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
அது 4.7 kWh பேட்டரி ஆகும். இதன் ரைடிங் ரேஞ்ச் 175 கிலோ மீட்டர்கள் ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் விலை 1,62,975 ரூபாயாக உள்ளது. மறுபக்கம் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டும் ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அது 5.3 kWh ஆகும். இதன் ரைடிங் ரேஞ்ச் 212 கிலோ மீட்டர்களாக இருக்கிறது.
அதே நேரத்தில் இதன் விலை 1,73,119 ரூபாயாக உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ரைடிங் ரேஞ்ச் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பாஸ் (BaaS) முறையிலும் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் 2.2 kWh மாடலின் பாஸ் விலை வெறும் 59,999 ரூபாய் மட்டுமே. ஆனால் இதை நீங்கள் 60 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் நீங்கள் ஒரு மாதத்திற்கு 1,470 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 36 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 2,124 ரூபாயையும், 24 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 2,893 ரூபாயையும் மாத கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
மறுபக்கம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் 3.1 kWh மாடலின் பாஸ் விலை வெறும் 66,167 ரூபாய் மட்டுமே. ஆனால் இதை 60 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 1,746 ரூபாயையும், 36 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 2,523 ரூபாயையும், 24 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 3,435 ரூபாயையும் மாத கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
மறுபக்கம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் 3.5 kWh மாடலின் பாஸ் விலை வெறும் 74,314 ரூபாய் மட்டுமே. ஆனால் இதை 60 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 1,736 ரூபாயையும், 36 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 2,508 ரூபாயையும், 24 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 3,415 ரூபாயையும் மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த வரிசையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ் வேரியண்ட்டின் 4.7 kWh மாடலின் பாஸ் விலை வெறும் 91,043 ரூபாய் மட்டுமே. ஆனால் இதை 60 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 2,086 ரூபாயையும், 36 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 3,013 ரூபாயையும், 24 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 4,103 ரூபாயையும் மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த வரிசையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ்டி வேரியண்ட்டின் 5,3 kWh மாடலின் பாஸ் விலை வெறும் 96,743 ரூபாய் மட்டுமே. ஆனால் இதை 60 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 2,364 ரூபாயையும், 36 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 3,415 ரூபாயையும், 24 மாதங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் 4,650 ரூபாயையும் மாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்கள் மற்றும் பேட்டரி ஆப்ஷன் மாடல்களையும் பாஸ் முறையில் நீங்கள் பயன்படுத்தும் காலத்தில், எவ்வளவு கிலோ மீட்டர்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ளலாம். இவ்வளவு கிலோ மீட்டர்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்ற வரம்பு எதுவும் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக ரேஞ்ச் தரக்கூடிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் ஐக்யூப் ஏற்றதாக இருக்கும். இது நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து, 10 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் கடக்க முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications