இந்தியால இப்படி ஒரு கம்பெனி இருந்ததையே எல்லாரும் மறந்துட்டாங்க! டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் கொடி பறக்குது!
இந்திய சந்தையில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையாவது என்பதெல்லாம் குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 ஸ்கூட்டர்களின் (Top 10 Scooters) பட்டியலில் எல்லாம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம்பெற தொடங்கி விட்டன.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூட இந்த பட்டியலில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம்பெற்றுள்ளன. அவை டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) ஆகியவை ஆகும்.

இதில், டிவிஎஸ் ஐக்யூப் 4வது இடத்தையும், பஜாஜ் சேத்தக் 5வது இடத்தையும், ஏத்தர் ரிஸ்டா 9வது இடத்தையும் பிடித்துள்ளன. டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 37,193 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 34.74 சதவீத வளர்ச்சி ஆகும்.
மறுபக்கம் பஜாஜ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 34,304 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 78.52 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வரிசையில் ஏத்தர் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17,960 ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 78.67 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் பெட்ரோல் மூலம் இயங்க கூடிய ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை உயர தொடங்கி விட்டது என்பதையே இந்த புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இந்த சூழலில் இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர தொடங்கியுள்ளது. எனவே வரும் மாதங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
இங்கே மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் ஆகிய நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் கொடி கட்டி பறக்க தொடங்கியுள்ளன. ஆனால் கடந்த சில காலம் முன்பு வரை இதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த ஓலா (Ola) நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை தற்போது அதலபாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் எதிரொலியாகவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலம் என்பதை தற்போது வெளியாகி வரும் புள்ளி விபரங்கள் மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன. இன்னும் ஒரு சில ஆண்டுகளில், இந்திய சாலைகளை எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக ஆட்சி செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications