சிங்கிள் சார்ஜில் 212 கிமீ ஓடும்! வெறும் 59 ஆயிரத்துக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! மிரள விட்ட தமிழ்நாட்டு நிறுவனம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஐக்யூப் (TVS iQube). இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் இந்திய சந்தையில் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 38,054 டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 23,581 டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

TVS iQube Side View

அதாவது இம்முறை 14,473 டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 61.38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters February 2026), டிவிஎஸ் ஐக்யூப் 4வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஆகிய ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த வரிசையில் டிவிஎஸ் ஐக்யூப் 4வது இடத்தை பிடித்துள்ளது. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள 3 ஸ்கூட்டர்களும், ஐசி இன்ஜின் பொருத்தப்பட்டவை ஆகும்.

TVS iQube

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை டிவிஎஸ் ஐக்யூப் பெற்றுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை டிவிஎஸ் ஐக்யூப், டிவிஎஸ் ஐக்யூப் எஸ் (TVS iQube S) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி (TVS iQube ST) ஆகியவை ஆகும்.

இதில், டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மட்டும் 3 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 2.2 kWh பேட்டரி ஒன்றாகும். இதன் ரேஞ்ச் (Range) 94 கிலோ மீட்டராக உள்ளது. அதே நேரத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற 2 பேட்டரி ஆப்ஷன்களான 3.1 kWh மற்றும் 3.5 kWh ஆகியவற்றின் ரேஞ்ச் முறையே 123 கிலோ மீட்டர் மற்றும் 145 கிலோ மீட்டராக இருக்கிறது.

மறுபக்கம் டிவிஎஸ் ஐக்யூப் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 145 கிலோ மீட்டராக உள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.3 kWh பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 212 கிலோ மீட்டர் ஆகும். இவை அனைத்தும் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அராய் ரேஞ்ச் (ARAI Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் ஐக்யூப் எஸ் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தலா 1 பேட்டரி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.08 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.62 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் பாஸ் (BAAS - Battery As A Service) முறையில் வாங்கினால், டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 59,999 ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்தால் மாதத்திற்கு 1,202 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டை பாஸ் முறையில் வாங்கினால், அதன் விலை வெறும் 96,743 ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால் ஒரு மாதத்திற்கு 1,818 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இவை அனைத்தும் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. இதன் காரணமாகவே டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 23, 2026, 23:19 [IST]
English summary
Tvs iqube electric scooter sales report february 2026 61 per cent growth
மேலும்... #tvs motor #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+