வாங்குனா இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர தான் வாங்குவேன் என அடம்பிடிக்கும் வாடிக்கையாளர்கள்.. ஏன் தெரியுமா?
டிவிஎஸ்ஸின் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலாவின் S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் அதிகம் விறபனை செய்யப்பட்டு வந்தன. ஓலாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஐக்யூப் உருவெடுத்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 37,193 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டிவிஎஸ். இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 34.74 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 27,604 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 9,589 ஐக்யூப் ஸ்கூட்டர்களை கடந்த ஏப்ரல் மாதம் அதிகமாக விற்பனை செய்துள்ளது டிவிஎஸ்.

இந்த விற்பனை அளவுடன் இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் சந்தையின் 6.26% சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறது டிவிஎஸ் ஐக்யூப். இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்து வரும் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஐக்யூப். இதனைத் தவிர்த்து ஆர்பிட்டர் மற்றும் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இதில் எக்ஸ் (X) என்பது சற்று விலை அதிகமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். எனவே அதனைத் தவிர்த்து விடலாம். ஆர்பிட்டர் (Orbiter) என்பது டிவிஎஸ்ஸின் மற்றுமொரு விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஏத்தர் ரிஸ்டாவிற்குப் போட்டியாக ஃபேமிலி வாடிக்கையாளர்களை மையப்படுத்தி கடந்த ஆண்டு இந்த ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது டிவிஎஸ். தற்போது தான் தனக்கான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி வருகிறது ஆர்பிட்டர்.

ஐக்யூபை விட ஆர்பிட்டர் சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். இருந்தாலும் நம்பகத்தன்மையின் காரணமாக, பல ஆண்டுகளாக விற்பனையில் இருப்பதன் காரணமாக ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே வாடிக்கையாளர்கள அதிகளவில் வாங்குகிறார்கள். ஐந்து விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன் இந்தியாவில் 1.07 லட்சம் ரூபாய் முதல் 1.72 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐக்யூப், ஐக்யூப் S மற்றும் ஐக்யூப் ST என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். இதில் ஸ்டாண்டர்டான வேரியன்டானது 2.2 kWh, 3.1 kWh மற்றும் 3.5 kWh என மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. S வேரியன்டானது 4.7 kWh பேட்டரி பேக்குடனும், ST வேரியன்டானது 5.3 kWh பேட்டரி பேக்குடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைந்தபட்சமாக 94 கிமீ முதல் அதிகபட்சமாக 212 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்கள் கொண்டிருக்கின்றன. சார்ஜிங்கும் வேகமாக ஆவதாலும், ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அனுபவத்தைக் கொடுப்பதாலும் வாடிக்கையாளர்கள் இந்த டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்பி வாங்குகிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மேலும் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்குகளில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் போல, ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா போல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்து வருகிறது டிவிஎஸ் ஐக்யூப். எனினும் மேலே கூறிய இருசக்கர வாகனங்களைப் போல தொட முடியாத இடத்தில் எல்லாம் இல்லை. பின்னாலேயே சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேஸ் செய்து வருகிறது. இதனாலேயே ஐக்யூபை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது டிவிஎஸ். இந்த அப்டேட்கள் ஐக்யூப் அதிகம் விற்பனையாவதை உறுதி செய்கின்றன.


Click it and Unblock the Notifications