212 கிமீ ரேஞ்சு கொடுக்கும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. உடனே ஆர்டரைப் போடுங்க!

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் அது டிவிஎஸ்ஸின் ஐ-க்யூப் (iQube) தான். சமீபத்தில் தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியன்ட் ஒன்றை டிவிஎஸ் வெளியிட்டது. புதிய வேரியன்ட் என்று சொல்வதை விட, ஏற்கனவே இருந்த வேரியன்டை சற்று பெரிய பேட்டரியுடன் வெளியிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

முதன் முதலில் வெளியிடப்பட்ட போது ஒரு சில பேட்டரி பேக்குகள் மட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டது. தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு ஐந்து விதமான பேட்டரி பேக்குகளுடன் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்க விற்பனையாகி வருகிறது. ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நாம் முதலில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய அம்சம் பேட்டரி பேக்கும், ரேஞ்சும் தான்.

TVS iQube

எனவே பேட்டரி பேக் மற்றும் அது கொடுக்கும் ரேஞ்சின் அடிப்படையில் எத்தனை ஐ-க்யூப் வேரியன்ட்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, அவை என்ன விலையைக் கொண்டிருக்கின்றன, எந்த வேரியன்ட் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் விரிவாக நாம் பார்க்கலாம்.

ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது ஸ்டாண்டர்டு, S மற்றும் ST என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். இதில் ஸ்டாண்டர்டு வேரியன்டில் 2.2 kWh, 3.1 kWh மற்றும் 3.5 kWh என மூன்று பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட S வேரியன்டில் 4.7 kWh பேட்டரி பேக்கும், டாப் எண்டான ST வேரியன்டில் 5.3 kWh பேட்டரி பேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

TVS iQube S

2.2 kWh பேட்டரி பேக் கொண்ட மாடலானது 94 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை 0-80% வரை 2.45 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது டிவிஎஸ். அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்டை 1 லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

3.1 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்டானது 123 கிமீ வரையிலான சான்றளிக்கப்ட்ட ரேஞ்சையும், அதிகபட்சமாக மணிக்கு 82 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது. இந்த பேட்டரியினை 0-80% வரை 4.03 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என டிவிஎஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த வேரியன்டை 1.10 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம்.

மூன்றாவதாக 3.5 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட். இது 145 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கினை 4.30 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். இதனை 1.13 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.

நான்காவதாக 4.7 kWh பேட்டரி பேக் வேரியன்ட். இதனையே டிவிஎஸ் நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பேட்டரி பேக்கானது 175 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், மணிக்கு 82 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை 4 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். இந்த புதிய வேரியன்டை 1.37 லட்சம் ரூபாய் என்ற விலையில் வெளியிட்டுள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

கடைசியாக 5.3 kWh பேட்டரி பேக். ஐ-க்யூப் லைன்-அப்பில் பெரிய பேட்டரி பேக் இது தான். இது 212 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ ஆகும். இந்த பெரிய பேட்டரி பேக்கை 80% வரை 4.18 மணி நேரத்திலேயே சார்ஜ் செய்து விட முடியும். இதனை 1.70 லட்சம் ரூபாய் என்ற விலையில் டிவிஎஸ் விற்பனை செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த வேரியன்டை வாங்குவது?

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துமே சான்றளிக்கப்பட்ட ரேஞ்சு தான். எனவே தினசரிப் பயன்பாட்டின் போது இங்கே குறிப்பிட்டிருப்பதை விட 20 கிமீ முதல் 30 கிமீ வரை குறைவான ரேஞ்சையே வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க முடியும். அந்த வகையில் அடிப்படை வேரியன்ட் மிகவும் குறைவான ரேஞ்சையே கொண்டிருக்கும். எனவே அதனை பரிசீலிக்க முடியாது. மிகவும் டைட்டான பட்ஜெட்டில் இருப்பவர்கள் கூட கொஞ்சம் சிரமம் பார்க்காமல் EMI-யிலாவது பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டையே தேர்ந்தெடுக்க நாங்கள் பரிசீலிக்கிறோம்.

புதிதாக வெளியாகியிருக்கும் 4.7 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்டே பட்ஜெட், ரேஞ்சு மற்றும் வசதிகள் என அனைத்திலும் நடுநிலையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. மேலும், புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வேரியன்ட் என்பதால் மற்ற வேரியன்ட்களை விட நம் கண்களுக்குத தெரியாத நிறைய விஷயங்கள் அப்டேட் ஆகியும், சிறப்பாகவும் இருக்கும்.

பட்ஜெட் பிரச்சினை இல்லை என்பவர்கள் டாப் எண்டு 5.3 kWh ST வேரியன்டை தேர்வு செய்யலாம். அதிகபட்ச ரேஞ்சைக் கொண்டிருக்கும் வேரியன்ட் இது தான். கொஞ்சம் நேரம் சேர்த்துப் பிரயாணம் செய்தாலும் இந்த வேரியன்டை வாங்கி விட்டால் ரேஞ்சு பயமில்லாமல் இருக்கலாம்.

Article Published On: Saturday, May 9, 2026, 19:15 [IST]
English summary
Tvs iqube electric scooter which variant to buy check all details here
மேலும்... #tvs #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+