ரூ.1.40 லட்சத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் முன்னிலை வகித்து வருகிறது. மாதாந்திர விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. ஆம், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 10 லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி உள்ளது. இதனை கொண்டாடும் வகையில், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் iQube MillionR Edition என்ற பெயரில் வந்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடலுக்கு ரூ.1,40,138 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் எடிசன்

ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3.5kWh பேட்டரி கொண்ட மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்பெஷல் எடிசன் வெளியிடப்பட்டு உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் IDC சோதனை தரவுகளின்படி 145 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. அதிக ரேஞ்சை எதிர்பார்க்கும் குடும்ப பயன்பாட்டு வாடிக்கையாளர்களுக்கு இது முக்கியமான அம்சமாக இருக்கும். அதிகபட்சமாக 82 கி.மீ வேகத்தில் செல்லும் திறனையும் இந்த மாடல் கொண்டுள்ளது.

TVS iQube

தனித்துவமான அம்சங்கள்

வழக்கமான ஐக்யூப் ஸ்கூட்டரில் இருந்து MillionR Edition என்பதை தனித்துக் காட்டும் வகையில் தோற்றத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வடதுருவ பிரதேசத்தில் வானில் இரவில் தோன்றும் வண்ணமயமான ஒளியை நினைவுகூறும் வகையில் இதற்கு அரோரா க்ரீன் டியூவல் டோன் என்ற விசேஷ வண்ணத் தேர்வில் வந்துள்ளது. இதனுடன் பிரீமியமான இருக்கை, புதிய கிராபிக்ஸ் மற்றும் பிரத்யேக MillionR என்ற பேட்ஜ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

Also Read

இதர வசதிகள்

இந்த ஸ்பெஷல் எடிஷனில் நடைமுறை பயன்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிதாக பொருட்களுக்கான சிறிய அறை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கூட்டரின் மொத்த சேமிப்பு இடம் 32 லிட்டரில் இருந்து 35.5 லிட்டராக அதிகரித்துள்ளது. தினசரி அலுவலகப் பயணம், ஷாப்பிங் உள்ளிட்ட பயன்பாடுகளில் இந்த கூடுதல் இடம் பயனுள்ளதாக இருக்கும்.

டைப் சி சார்ஜர்

மேலும், USB Type-C சார்ஜிங் போர்ட்டும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை பயணத்தின்போது சார்ஜ் செய்ய இது உதவும். ஐக்யூப் ஸ்கூட்டரின் முக்கிய பலங்களில் ஒன்றான கனெக்டட் தொழில்நுட்பமும் தொடர்கிறது. இதன்மூலமாக 118 வகையான கனெக்டெட் வசதிகள் இதில் இருப்பதாக டிவிஎஸ் கூறி இருக்கிறது.

Also Read

மில்லியன் சாதனை

டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்த நிலையில், இந்த MillionR Edition வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும். குறிப்பாக, இந்த பண்டிகை காலத்தில் இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்புவோருக்கு கூடுதல் அம்சங்களுடன் புதிய தேர்வாக இருக்கும்.

விற்பனையில் முன்னிலை

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 59,386 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர் பல்வேறு திறன் கொண்ட பேட்டரிகள், வசதிகள் மற்றும் கவரும் டிசைனில் கிடைக்கிறது. இதனால், இந்த ஸ்கூட்டருக்கான வர்த்தக வளர்ச்சி மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையை குறிவைத்து ஏத்தர், சிம்பிள் எனெர்ஜி போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய மாடல்களை களமிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, August 25, 2026, 13:18 [IST]
English summary
Tvs iqube millionr edition price 1 40 lakh range features details
மேலும்... #electric scooter #new launches #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out