டாப் 10ல இருக்குற ஒரே வண்டி இது தான்! தமிழ்நாட்டு தயாரிப்புன்னா சும்மாவா?

டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் என்ற வாகனத்தை இந்திய மார்கெட்டில் விற்பவனை செய்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு விற்பனையான டாப் 10 டூவீலர்களில் உள்ள ஒரே இவி வாகனம் இது தான். இந்த அளவிற்கு ஏன் இவ்வளவு விற்பனையாகியுள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2 வீலர் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்தாண்டு விற்பனையான டாப் 10 டூவீலர்களில் டிவிஎஸ் ஐக்யூப் தான் ஒரே இவி வாகனமாக இரக்கிறது. இந்த வாகனத்திற்கு பெட்ரோல் வாகனத்திற்கு இணையான டிமாண்ட் இருக்கிறது. ஹீரோ ஸ்பிளெண்டர் ஹோண்டா ஆக்டிவா போன்ற வாகனங்களுக்கு இணையாக இந்த வாகனம் விற்பனையாகி வருகிறது.

இந்த டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம்35,177 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த வாகனத்தில் போஷ் நிறுவனத்திடமிருந்து பெபறப்ட்ட ஹப் மவுண்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதில் டாப் வேரியன்ட்ட மாடல் 82 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளுது. அதிகபட்சம் 116.8 கிலோ எடை கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளுது.

TVS iQube

இந்த டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் 3.1 வெர்ஷன் 0-80 சதவீத வசார்ன் ஏற 2 மணி நேரம் 45 நிமிடம் முதல் 4 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் கனெக்ட் செய்யும் சார்ஜரை பொருத்து சார்ஜிங் நேரம் மாறுபடும். இந்த ஸ்கூட்டரில் 32 லிட்டர் டிரங்க், கலர் டிஎஃப்டி டிஸ்பிளே, முன்பக்க டிஸ்க் பிரேக், பின்பக்க ரைடருக்கான பேக் ரெஸ்ட், டுயல் டோன் கலர் ஆப்ஷன், ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்கூட்டரில் உள்ள 2.2kWh பேட்டரி ஆப்ஷன் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ரூ1 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது இந்த வாகனம் 4.4kW மோட்டாருக்கு பவரை வழங்குகிறது. இது 33 என்எம் டார்க்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

TVS iQube

டிவிஎஸ் நிறுவனம் பெட்ரோல் மற்றும் இவிஸ்கூட்டரின் செலவு விபரங்களை வெளியிட்டுள்ளது.இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ100க்கு விற்பனையாகிவ ருகிறது. இதில் 50,000 கி.மீ பயணிக்க வேண்டும் என்றால் ரூ1 லட்சம் வரை செலவாகும். ஆனால் டிவிஎஸ் ஐக்யூப் வாகனத்தில் 50,000 கி.மீ பயணிக்க வெறும் ரூ6466 தான் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இதன் மூலம் ஐக்யூப் ஸ்கூட்டர் ரூ93,500 மிச்சப்படுத்தி தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய ரூ18.75 தான் கரனென்ட் செலவு வரும் என்றும், ஒரு நாளுக்கு 30 கி.மீ பயணிக்கும் மக்கள் வாரம் 2 முறை ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால் போதும். அப்படி பார்த்தால் வாரத்திற்கு ரூ37.50 தான் செலவு மாடம் ரூ150 தான் செலவு இதை தினசரி கணக்கிட்டால் ரூ5 தான் செலவு ஆகும். ரூ5க்கு 30 கி.மீ வரை பயணிக்க முடியும்.

TVS iQube

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் ஸ்கூட்டர்களை எல்லாம் புறம்தள்ளி மக்களுக்கு சேமிப்பையும் குறைந்த செலவையும் இந்த இ ஸ்கூட்டர்கள் வழங்கி வருகிறது.இதன்படி பார்த்தால் இ்நத வாகனம் நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பலன் தரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 24, 2026, 12:20 [IST]
English summary
Tvs iqube only e2w in top 10 two wheelers december 2025
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X