ரூ.90,000ல் ஸ்பெஷல் அம்சங்களுடன் டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் அறிமுகம்!!

இந்தியாவின் பிரபலமான குடும்ப ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூபிடர் ஸ்பெக்ட்ரல் என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்பெஷல் மாடலுக்கு ரூ.89,825 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்தான் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் வரிசையில் டாப்-எண்ட் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்பெக்ட்ரல் ஸ்பெஷல் மாடலானது இரண்டு விதமான இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஸ்பெக்ட்ரல் புளூ மற்றும் ஸ்பெக்டரல் காப்பர் என்ற பெயர்களில் இந்த விசேஷ பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிவிஎஸ் நிறுவனத்தின் பிரத்யேகமான Spectral Colour Technology என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சம் படும் கோணத்தைப் பொறுத்து ஸ்கூட்டரின் பாடி நிறம் மாறுவது போன்ற தோற்றம் கிடைக்கும்.

TVS Jupiter 110 Spectral

இந்த புதிய வண்ணத் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் இன்டீரியர் பேனல்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய சீட் ஃபினிஷ் மற்றும் குரோம் பூச்சு கொண்ட ரியர்-வியூ மிரர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான ஜூபிடர் 110 ஸ்கூட்டர் உடன் ஒப்பிடும்போது ஸ்பெக்டரல் மாடலின் தோற்றம் கூடுதல் பிரீமியமாக இருக்கிறது.

Also Read

புதிய ஜூபிடர் 110 ஸ்பெக்டரல் எடிசனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக Sequential Turn Signal Lamps இடம்பெற்றுள்ளன. இவை டர்ன் சிக்னல் கொடுக்கும்போது தொடர்ச்சியாக அலை அலையாய் ஒளிரும் வகையில் செயல்படும். இந்த தனித்துவமான வசதி 110cc ஸ்கூட்டர் செக்மென்ட்டில் முதல் முறையாக வழங்கப்படும் அம்சமாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் நபரின் வசதியை மேம்படுத்தும் வகையில் பேக்ரெஸ்ட்டுடன் கூடிய நீளமான பிரீமியம் சீட் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களிலும், தினசரி குடும்ப பயன்பாட்டிலும் இது கூடுதல் வசதியை வழங்கும்.

Also Read

இந்த ஸ்கூட்டரில் டைப் சி கேபிளை பயன்படுத்தி சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை பயணத்தின்போது சார்ஜ் செய்ய இது உதவும். டிவிஎஸ் நிறுவனத்தின் SmartXonnect கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது. இதன் மூலம் நேவிகேஷன், கால் மற்றும் SMS அலர்ட்கள் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

இந்த ஸ்கூட்டரில் 33 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ஸ்பேஸ் இடவசதியும் உள்ளது. இதில் இரண்டு ஹெல்மெட்களை வைக்க முடியும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது. இதனால் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற நடைமுறை வசதிகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.

தோற்றத்தில் கூடுதல் பிரிமீயமாகவும், கூடுதல் வசதிகளுடன் வந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான வேரியண்ட்டுகளில் உள்ள 113.3cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்துகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.91 பிஎச்பி பவரையும் 9.8என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் ஸ்பெக்ட்ரல் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.89,825 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், SmartXonnect Disc வேரியண்ட்டை விட இது ரூ.3,000 வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் டீலர்ஷிப்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் ஜூபிடர் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Article Published On: Friday, August 28, 2026, 8:26 [IST]
English summary
Tvs jupiter 110 spectral edition launched rs 89825 dual tone colours features
மேலும்... #new launches #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out