உலகையே திரும்பி பார்க்க வைக்க போகும் மைலேஜ்! தமிழ்நாட்டு நிறுவனத்தின் ஸ்கூட்டரை 1 கோடி பேர் வாங்க போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). விற்பனையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் கடந்துள்ளது. இந்திய சந்தையில் 90 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இது குறித்து ஆட்டோகார் ப்ரொஃபஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் கடந்த 2013ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட வெறும் 13 ஆண்டுகளில் 90 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களிலேயே மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் என்ற பெருமை ஜூபிடருக்கு உண்டு.

இன்னும் சொல்லப்போனால் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்யும் மொத்த ஸ்கூட்டர்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஜூபிடர் ஸ்கூட்டர்கள் ஆகும். அதாவது டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2025-26ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) ஒட்டுமொத்தமாக 23 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதில், 64 சதவீதம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் ஆகும்.
அதாவது கடந்த 2025-26ம் நிதியாண்டில் 14.63 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024-2025ம் நிதியாண்டுடன் (2024 ஏப்ரல் 1 - 2025 மார்ச் 31) இது 32 சதவீத வளர்ச்சி ஆகும். ஏனெனில் கடந்த 2024-2025ம் நிதியாண்டில் 11.07 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் கடைசி 10 லட்சம் யூனிட்கள் வெறும் 8 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே ஒட்டுமொத்தமாக 1 கோடி யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 10 லட்சம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாக வேண்டும். ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் முழுமையாக 8 மாதங்கள் உள்ளன. எனவே நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே 1 கோடி யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டிவிஎஸ் ஜூபிடர் கடக்கலாம்.
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை 113 சிசி பெட்ரோல் இன்ஜின் மற்றும் 125 சிசி பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன் ஆகியவை ஆகும். ஆனால் கூடிய விரைவில் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இதில், 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் விலை (Price) வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) போன்ற ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் டிவிஎஸ் ஜூபிடர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர் இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications