மொத்த ஜப்பானையும் கதற விடும் தமிழ்நாட்டு நிறுவனம்! உலகமே அண்ணாந்து பாக்கும் வகையில் மைலேஜ் தரும் வண்டி வருது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜூபிடர், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல.
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,27,089 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 1,03,576 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 23,513 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 22.70 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters February 2026), டிவிஎஸ் ஜூபிடர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நம்புகிறது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனின் வருகைதான் இதற்கு காரணம்.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் இதன் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. இதுதான் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) ஆகும்.
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் 2 வகையான இன்ஜின் திறன்கள் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை 113.3 சிசி மற்றும் 124.8 சிசி இன்ஜின்கள் ஆகும். இதில், 124.8 சிசி இன்ஜின் அடிப்படையில்தான் டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு கொண்டுள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகை, ஜப்பானை சேர்ந்த நிறுவனங்களான ஹோண்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களின் தயாரிப்புகளான ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஆக்ஸஸ் (Suzuki Access) ஆகியவற்றுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








