90 கிமீ மைலேஜ்! ஹோண்டா ஆக்டிவாவை விட குறைவான விலையில் டிவிஎஸ் ஸ்கூட்டர்! உலகமே இந்தியாவை திரும்பி பாக்க போகுது

இந்திய சாலைகளில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு (Honda Activa) பிறகு, நீங்கள் அதிகமாக பார்க்கும் ஸ்கூட்டர், கண்டிப்பாக டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டராகதான் (TVS Jupiter) இருக்கும். இதன் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,29,744 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1,07,847 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது தற்போது 21,897 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

TVS Jupiter Scooter

இது 20.30 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers January 2026), டிவிஎஸ் ஜூபிடர் 4வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) ஆகியவை உள்ளன. இந்த வரிசையில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர், பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

TVS Jupiter

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை போலவே, டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரும் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 110 மற்றும் 125 என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரும் 110 மற்றும் 125 என 2 வெர்ஷன்களில் விற்பனையாகி கொண்டுள்ளது.

இதில், ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 75,433 ரூபாயாக உள்ளது. ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 73,400 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 89,256 ரூபாயாக உள்ளது. ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 76,200 ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை அனைத்துமே ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். எனவே ஹோண்டா ஆக்டிவாவை விட மிகவும் விலை குறைவான ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூபிடர் இருக்கிறது. கூடிய விரைவில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் புதிய வெர்ஷன் ஒன்று விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

அது சிஎன்ஜி வெர்ஷன் ஆகும். உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2026ம் ஆண்டின் மத்தியில், டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2026, 12:59 [IST]
English summary
Tvs jupiter sales report january 2026 20 per cent growth
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+