90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை அடிமாட்டு விலையில் களமிறக்க போறாங்க! உலகையே மிரள விடும் தமிழ்நாட்டு நிறுவனம்!
பொதுவாக ஆண்டு இறுதியில் வாகனங்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும். தள்ளுபடிகள் போன்ற சலுகைகள் அதிக அளவில் வழங்கப்படுவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற ஆண்டு இறுதிகளை போல், கடந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலும், இந்தியாவில் வாகன விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது.
குறிப்பாக டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இந்த வரிசையில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,20,477 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 88,668 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 31,809 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் 35.87 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers December 2025), டிவிஎஸ் ஜூபிடர் 4வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) ஆகிய டூவீலர்கள் உள்ளன. இந்த வரிசையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஆகிய ஸ்கூட்டர்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டிவிஎஸ் ஜூபிடர் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் 113.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் 124.76 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 125 என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது.
இதில், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் பவர் அவுட்புட் 5.9 kW ஆகவும், டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் பவர் அவுட்புட் 6 kW ஆகவும் உள்ளது. மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் எடை 106 கிலோ ஆகவும், டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் எடை 108 கிலோ ஆகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில், இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப், எமர்ஜென்ஸி பிரேக் வார்னிங், டர்ன் சிக்னல் லேம்ப் ரீசெட் மற்றும் ஹசார்டு லைட்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரிலும் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப் மற்றும் ஹசார்டு லைட்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் இந்த 2 ஸ்கூட்டர்களும் வாய்ஸ் அஸிஸ்ட் உடன் நேவிகேஷன் வசதியையும் கொண்டுள்ளன. சரி, விலை விஷயத்திற்கு வருவோம்.
டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள தகவலின்படி பார்த்தால், டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 73,400 ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 76,200 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதான் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் ஆகும். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவிருப்பது உண்மையிலேயே பெருமைக்குரிய ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








