ஹோண்டா ஆக்டிவாவை கதற விட போகும் டிவிஎஸ் ஜூபிடர்... உலகத்திலேயே இதுதான் முதல் முறை...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). இதன் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,17,383 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,02,588 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14,795 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

TVS Jupiter 125

இதன் மூலம் விற்பனையில் 14.42 சதவீத வளர்ச்சியை டிவிஎஸ் ஜூபிடர் பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters April 2026), டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் வழக்கம் போல ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,20,774 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,94,787 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

TVS Jupiter

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 25,987 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் 13.34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்தாலும் கூட, இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹோண்டா ஆக்டிவா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது? என்பதை இதன் மூலம் நம்மால் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கையில், ஹோண்டா ஆக்டிவாவை சற்று நெருங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனின் வருகைதான் இதற்கு காரணம். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ விற்பனைக்கு வரலாம். இதுதான் உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் ஆகும். எனவே இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதன் ஆரம்ப விலை வெறும் 90 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான ஆக்டிவாவிற்கு, இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜூபிடர் எதிர்காலத்தில் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஆக்டிவா மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) போன்ற ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் டிவிஎஸ் ஜூபிடர், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. டிவிஎஸ் மட்டுமல்லாது, சுஸுகி நிறுவனமும் அதன் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Article Published On: Monday, May 18, 2026, 22:19 [IST]
English summary
Tvs jupiter vs honda activa sales report april 2026
மேலும்... #tvs motor #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+