ஹீரோ, ஹோண்டாவை முந்தி டிவிஎஸ் விஎஸ்வரூபம்... இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகன நிறுவனமாக சாதனை!
தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் கடந்த மாத மொத்த விற்பனையில் புதிய வரலாறு படைத்துள்ளது. நீண்ட காலமாக நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களாக முதல் இரண்டு இடங்களில் இருந்த ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி பெரிய அளவிலான வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
கடந்த மாதம் டிவிஎஸ் நிறுவனம் உள்நாடு, ஏற்றுமதியை சேர்த்து 6,03,138 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம். அத்துடன் மிக நீண்ட காலமாக முதல் இரண்டு இடங்களை மாற்றி போட்டி போட்டு பிடித்து வைத்திருந்த ஹீரோ, ஹோண்டாவை பின்னுக்குத் தள்ளி ஒட்டுமொத்த விற்பனையில் இந்த சாதனையை படைத்துள்ளது.

இதுவரை மொத்த விற்பனையில் வலுவாக இருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூலை விற்பனையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலையில் மொத்தமாக 4,49,755 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மாதம் 5,33,416 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது. விற்பனை 19 சதவீதம் கூடுதலாக இருந்தாலும், டிவிஎஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்களைவிட அதிகமாக விற்பனை செய்ய முடியவில்லை.
| Company | July 2026 | July 2025 | YoY |
|---|---|---|---|
| TVS Motor | 6,03,138 | 4,36,570 | +38% |
| Honda | 5,42,934 | 5,15,378 | +5% |
| Hero MotoCorp | 5,33,416 | 4,49,755 | +19% |
ஹீரோவுடனான கூட்டணியை பிரிந்து தசாப்தங்களை கடந்து ஹீரோவுடன் முதலிடத்திற்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது ஹோண்டா. ஆனால், கடந்த மாதம் விற்பனையில் ஹீரோவை முந்தி முதலிடத்தை பிடிக்கும் கனவில் இருந்த ஹோண்டாவுக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் விஸ்வரூபம் அதிர்ச்சியை கொடுத்தது.

கடந்த ஆண்டு ஜூலையில் 5,15,378 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருக்கும் ஹோண்டா நிறுவனம், சென்ற மாதம் இந்தியாவில் 5,42,934 யூனிட்டுகளை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்தது. இது உள்நாடு மட்டுமின்றி, ஏற்றுமதி மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உள்ளடக்கிய விற்பனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், உள்நாட்டு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு உள்நாட்டு சந்தையில் 4,01,171 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஜூலையில் 4,78,689 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 19 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, கடந்த ஆண்டு ஜூலையில் 4,66,331 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா சென்ற மாதம் 4,76,436 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது வெறும் 2 சதவீதம் மட்டுமே கூடுதலாகும்.
உள்நாட்டு சந்தையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சென்ற ஆண்டு 3,08,720 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 4,37,394 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த விற்பனையில் டிவிஎஸ் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியதற்கு, ஏற்றுமதிதான் டிவிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.
| Company | July 2026 | July 2025 | YoY |
|---|---|---|---|
| TVS Motor | 1,65,070 | 1,30,070 | +27% |
| Honda | 66,498 | 49,047 | +36% |
| Hero MotoCorp | 32,013 | 37,358 | -14% |
ஏற்றுமதியை பொறுத்தவரையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் டிவிஎஸ் நிறுவனம் 1,65,070 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 1,30,070 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 27 சதவீதம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
| Company | July 2026 | July 2025 | YoY |
|---|---|---|---|
| TVS Motor | 1,65,070 | 1,30,070 | +27% |
| Honda | 66,498 | 49,047 | +36% |
| Hero MotoCorp | 32,013 | 37,358 | -14% |
அதேபோன்று, கடந்த ஆண்டு ஜூலையில் 49,047 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா, கடந்த ஜூலைில் 66,498 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற ஜூலையில் 37,358 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மாதம் 32,013 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது.

மின்சார இருசக்கர வாகன மார்க்கெட்டிலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சாதித்துள்ளது. கடந்த மாதம் 60,394 மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ நிறுவனம் 22,714 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அண்மையில்தான் அடியெடுத்து வைத்துள்ளதால், பெரிய அளவிலான எண்ணிக்கைய பெறவில்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் இதுவரை அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில், டிவிஎஸ் விஸ்வரூபத்தையும், விற்பனைக் கொள்கையையும் பார்த்து தற்போது சர்வதேச சந்தையில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கி உள்ளது. அண்மையில் ஜெர்மனியில் தனது இருசக்கர வாகன விற்பனையை துவங்கியது. உலக அளவில் 53 நாடுகளில் ஹீரோ இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
