தமிழ்நாட்டு கம்பெனியா ஒவ்வொருத்தரையும் பெருமை பட வைக்கும் டிவிஎஸ்! ஓசூரில் தயாராகும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் சுமார் 5.19 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 1 லட்சம் யூனிட்களுக்கும் அதிகம் என சொன்னால் நம்ப முடிகிறதா? டிவிஎஸ் நிறுவனத்தில் அப்படி எந்த மாதிரியான வாகனங்கள் அதிகமாக விற்பனையாகுகின்றன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழ்நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமாக உலகளவில் டிவிஎஸ் மோட்டார் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதுதான் பலருக்கும் தெரியும்; ஆனால் மூன்று-சக்கர வாகனங்கள் மற்றும் மொபெட் (Moped) உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, ஓசூரில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

tvs motor company 2026 march sales

இவை எல்லாம் சேர்த்துதான் கடந்த மார்ச் மாதத்தில் 5.19 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 5 லட்சத்து 19 ஆயிரத்து 358 வாகனங்கள் ஆகும். இது, 4 லட்சத்து 14 ஆயிரத்து 687 டிவிஎஸ் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த 2025 மார்ச்சை விட 25.24% அதிகமாகும்.

இந்த 5,19,358 வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் 3-சக்கர வாகனங்கள் வெறும் 21 ஆயிரத்து 224 மட்டுமே ஆகும். மீதி 4 லட்சத்து 98 ஆயிரத்து 134 வாகனங்கள், டிவிஎஸ் 2-வீலர்கள் ஆகும். 21,224 மூன்று-சக்கர வாகனங்களிலும் 5,532 மட்டுமே கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

tvs motor company 2026 march sales

மீதி 15 ஆயிரத்து 692 டிவிஎஸ் 3-வீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ள 4,98,134 இருசக்கர வாகனங்களில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 833 யூனிட்கள் இந்தியாவிலும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 751 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டவை ஆகும்.

உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து கடந்த மார்ச் மாதத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 788 பைக்குகளையும், 2 லட்சத்து 17 ஆயிரத்து 624 ஸ்கூட்டர்களையும், 38 ஆயிரத்து 877 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இவை இல்லாமல், 47 ஆயிரத்து 722 டிவிஎஸ் மொபெட் வாகனங்களும் கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று-சக்கர வாகனங்கள் என இரண்டும் சேர்த்து கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 365 வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. அதேநேரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 443 யூனிட்கள் ஆகும்.

மொத்தமாக கடந்த ஒரு வருடத்தில் 15.60 லட்சம் வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 12.16 லட்சமாக மட்டுமே பதிவாகி இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் டிவிஎஸ் விற்பனை செய்த 15.60 லட்சம் வாகனங்களில் 15 லட்சம் 2-வீலர்களும், 60 ஆயிரம் 3-வீலர்களும் அடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் சமீப காலமாக 3-வீலர்கள் விற்பனையிலும் முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளது. நடந்து முடிந்த 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.2,900 கோடி முதலீடு செய்துள்ளதால், அதன் பலன்களை டிவிஎஸ் மோட்டார் அறுவடை செய்து வருகிறது. இதன் மூலமாக, குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-இல் அதிகமாக டிவிஎஸ் கவனம் செலுத்த உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 17:06 [IST]
English summary
Tvs motor company sold 519358 vehicles in march 2026 check all details here
மேலும்... #tvs motor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+