இந்தியாவிலேயே ஓய்வே இல்லாம உழைக்கும் 2-வீலர் ஆலை... நம்ம தமிழ்நாட்டில் தான் இருக்கு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 2 ஆயிரத்து 890 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, இதற்கு அடுத்த நிலையில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 956 இருசக்கர வாகனங்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

இவற்றிற்கு அடுத்த மூன்றாவது இடத்தில்தான் நம் தமிழ்நாட்டை சேர்ந்த TVS மோட்டார் நிறுவனம் உள்ளது. கடந்த மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 14 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைகள் யாவும் உள்நாட்டு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை ஆகும்.

tvs motor dethrones industry giants

அதுவே, கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களை முந்திக் கொண்டு டிவிஎஸ் மோட்டார் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு பல வெளிநாட்டு சந்தைகளில் டிவிஎஸ் கம்பெனி வலுவான மார்க்கெட்டை கொண்டுள்ளது.

இதனால், இந்திய சந்தையில் விற்பனை செய்வதில் பாதி எண்ணிக்கையிலான TVS வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்க சந்தை ஆனது TVS கம்பெனியின் பிரதானமான சந்தையாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 403 TVS 2-வீலர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டுள்ளன.

tvs motor dethrones industry giants

ஒட்டுமொத்தமாக பார்த்தால், உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து 5 லட்சத்து 65 ஆயிரத்து 417 இருசக்கர வாகனங்களை TVS நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 159 2-வீலர்களையும், ஹோண்டா 5 லட்சத்து 28 ஆயிரத்து 281 2-வீலர்களையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன.

அதாவது, ஹோண்டாவை காட்டிலும் 59 ஆயிரத்து 325 இரு சக்கர வாகனங்கள் அதிகமாகவும், ஹீரோவை காட்டிலும் 38 ஆயிரத்து 289 இரு சக்கர வாகனங்கள் அதிகமாகவும் TVS மோட்டார் விற்பனை செய்துள்ளது. மேலும், கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் விற்பனை செய்ததை காட்டிலும் நடப்பு ஜூன் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை சுமார் 47% அதிகரித்துள்ளது.

OEM June 2026 June 2025 Diff
Hero MotoCorp 5,02,890 5,25,136 -22,246
Honda 4,68,956 3,88,812 80,144
TVS Motor 4,11,014 2,81,012 1,30,002
Bajaj Auto 1,66,956 1,49,317 17,639
Royal Enfield 1,02,930 76,957 25,973
Suzuki Motorcycle 91,264 95,244 -3,980
Total 17,44,010 15,16,478 2,27,532

அதுவே, ஹோண்டா நிறுவனம் 26% வளர்ச்சியையும், ஹீரோ நிறுவனம் வெறும் 2.3% வளர்ச்சியையும் மட்டுமே பதிவு செய்துள்ளன. உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரையில் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 6.31% வீழ்ச்சியையும், 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 4.24% வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

அதுவே ஹோண்டா நிறுவனம் 2026 மே மாதத்தை காட்டிலும் 2.03 சதவீதமும், 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 20.61 சதவீதமும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல், TVS மோட்டார் நிறுவனமும் 2026 மே மாதத்தை காட்டிலும் 6.88 சதவீதமும், 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 46.26 சதவீதமும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ, ஹோண்டா மற்றும் TVS மோட்டார் இவை மூன்றும் தான் தற்போதைக்கு இந்தியாவின் பிரதானமான 2-வீலர் நிறுவனங்களாக உள்ளன. வெளிநாட்டு ஏற்றுமதிகளையும் கணக்கில் எடுத்தால், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த TVS மோட்டார் முதலிடம் வகிப்பது பெருமை அளிக்கிறது. இதில் இருந்து இந்தியாவிலேயே ஓய்வே இல்லாமல் உழைக்கும் 2-வீலர் தொழிற்சாலையாக TVS மோட்டாரின் ஓசூர் தொழிற்சாலை விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, July 4, 2026, 21:56 [IST]
English summary
Tvs motor dethrones industry giants hero and honda in global volume battle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out