விஜய் முதல்வராக பதவியேற்கும் நேரத்திலா இப்படி நடக்கனும்... ஊரில் அனைவரும் வாங்கிய ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தம்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து ஐக்யூப் (iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதன் எஸ் (S) வேரியண்ட்டின் விற்பனை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்ட்டாக தற்போது நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் ஸ்டாண்டர்ட் அல்லது விலைமிக்க 'எஸ்டி' (ST) என்கிற இரு வேரியண்ட்களில் ஒன்றை வாங்கும் சுழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதில் டிவிஎஸ் மோட்டார் முன்னிலையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் 2வது இடத்தில் இருக்க, முதலிடத்தை டிவிஎஸ் பிடித்துள்ளதை சமீபத்தில் பார்த்திருந்தோம். டிவிஎஸ் இந்த விஷயத்தில் இந்த அளவிற்கான வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதில் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பங்களிப்பு முக்கியமானது ஆகும்.

tvs iqube s electric scooter discontinued

இருப்பினும், தற்போது ஐக்யூப் ஸ்கூட்டரில் ஒரு வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுத்தியுள்ளது. ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி என மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதில் மத்திய-நிலை எஸ் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

ஐக்யூப் எஸ் ஸ்கூட்டர் ரூ.1.32 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-இல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில், 3.5kWh பேட்டரி வழங்கப்பட்டு வந்தது. இந்த பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 145கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இருந்தது. ஐக்யூப் எஸ் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 78கிமீ ஆகும்.

tvs iqube s electric scooter discontinued

தொழிற்நுட்ப வசதிகளாக, 7-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, நேவிகேஷன், க்யூ-பார்க் அசிஸ்ட், எச்.எம்.ஐ கண்ட்ரோலர் மற்றும் 17.78 செ.மீ டச் ஸ்க்ரீன் டாஷ்போர்டு உள்ளிட்டவை ஐக்யூப் எஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டன. இதில் டச் ஸ்க்ரீன் டாஷ்போர்டு திரை ஆனது டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் கனெக்டிவிட்டி வசதி கொண்டதாக வழங்கப்பட்டது.

ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டு இருந்தாலும், கவலை வேண்டாம் மேற்கூறப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற வேரியண்ட்களில் பெறலாம். இருப்பினும், இந்த வசதிகள் அனைத்தையும் ஒரே வேரியண்ட்டில் பெற முடியாது. ஐக்யூப் எஸ் வேரியண்ட்டில் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி வழங்கப்பட்டது.

இந்த அளவிற்கு அம்சங்கள் நிறைந்ததாக இருப்பினும், ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மற்ற இரு வேரியண்ட்களை காட்டிலும் இது அதிக வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்டது ஆகும். இதனால் மற்ற வேரியண்ட்களின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது.

தற்போது எஸ் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் ஐக்யூப் ஸ்கூட்டரை தெளிவாக ஸ்டாண்டர்ட் அல்லது எஸ்டி வேரியண்ட்டில் ஒன்றில் வாங்கலாம் எனவும், இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் குழப்பமடைய தேவை இருக்காது எனவும் டிவிஎஸ் நிறுவனம் நம்புகிறது. மேலும், ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், ஐக்யூப் எஸ்டி தனித்து தெரிவதாகவும் டிவிஎஸ் நம்புகிறது. ஐக்யூப் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது குறைந்த விலையில், போதுமான வசதிகள் உடன் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற இரு வேரியண்ட்களின் விற்பனையை அதிகரிக்கவும், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும் இவ்வாறான நடவடிக்கையை டிவிஎஸ் மோட்டார் மேற்கொண்டுள்ளது என கூறினாலும், இந்த நடவடிக்கையால் ஐக்யூப் விற்பனை குறையும் போலவே எங்களுக்கு தோன்றுகிறது. ஏனேனில், ஸ்டாண்டர்ட் மற்றும் எஸ்டி என்கிற இரு வேரியண்ட்களில் எதை வாங்குவது என குழம்புபவர்களின் பிரதான தேர்வாக ஐக்யூப் எஸ் விளங்கியது.

அவ்வாறு குழம்புபவர்களை விலையுயர்ந்த ஐக்யூப் எஸ்டி பக்கம் ஈர்க்கும் முயற்சியாகவே டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கிறோம். அல்லது, ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விற்பனையை நிறுத்திவிட்டு, வேறு ஏதேனும் திட்டத்தில் டிவிஎஸ் உள்ளதா என்பது தற்போதைக்கு தெரியவில்லை. ஐக்யூப் எஸ் நிறுத்தத்தால் வரும் மாதங்களில் பஜாஜ் சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Tuesday, May 5, 2026, 15:39 [IST]
English summary
Tvs motor discontinues iqube s electric scooter in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+