நைட் ஃபுல்லா சார்ஜ் போட தேவையில்ல, 4 மணிநேரத்தில் 120கிமீ-க்கான சார்ஜ்! ரூ.1.50 லட்சத்திற்குள் TVS இ-ஸ்கூட்டர்

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் சமீபத்தில் அதன் ஐக்யூப் (iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 'எஸ்' (S) வேரியண்ட்டின் விற்பனையை நிறுத்தியது, இந்த ஸ்கூட்டரை வாங்க இருந்த பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில், விற்பனை நிறுத்தப்பட்ட ஒரிரு நாட்களில் ஐக்யூப் எஸ் மீண்டும் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு விற்பனையில் அதன் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இதனாலேயே, அவ்வப்போது ஐக்யூப் அப்கிரேட் செய்யப்படும் நிலையில், சமீபத்தில் இதன் வேரியண்ட்களுள் ஒன்று நிறுத்தப்பட்டது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

tvs iqube s electric scooter

இதன் காரணமாக ஐக்யூப் விற்பனை வரும் நாட்களில் குறையும் என்றும், இதற்கு விற்பனையில் போட்டியாக உள்ள பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஓலா எஸ்1 (Ola S1) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிக்கும் என்று அப்போது கூறியிருந்தோம். ஆனால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்த விஷயத்தில் வேறொரு திட்டத்தை வைத்திருந்துள்ளது.

டிவிஎஸ் ஐக்யூப் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அளவில் பெரியதான புதிய 4.7kWh பேட்டரியை பெற்று வந்துள்ளது. ஐக்யூப் எஸ் ஸ்கூட்டரில் முன்பு 3.5kWh பேட்டரி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 4.7kWh பேட்டரி உடன் ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் அறிமுகத்தின் மூலமாக, டிவிஎஸ் ஐக்யூப் தற்போது ஒவ்வொரு வேரியண்ட்களிலும் வெவ்வேறு விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

tvs iqube s electric scooter

ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி (ST) என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஐக்யூப் வேரியண்ட்டை 2.2kWh அல்லது 3.1kWh அல்லது 3.5kWh பேட்டரி உடன் வாங்கலாம். இதில், 3.5kWh பேட்டரி ஆப்ஷன் தான் முன்பு ஐக்யூப் எஸ் வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது ஐக்யூப் எஸ் வேரியண்ட் ஆனது 4.7kWh பேட்டரிக்கு மாற்றப்பட்டுள்ளது. விலைமிக்க எஸ்டி வேரியண்ட் ஆனது இன்னும் அளவில் பெரியதான மற்றும் அதிக ஆற்றலை வழங்கக்கூடிய 5.3kWh பேட்டரி உடன் கிடைக்கிறது. புதிய ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் 4.7kWh பேட்டரி ஆனது முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 175கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கிச் செல்லக்கூடியதாக உள்ளது.

இது 3.5kWh பேட்டரி வழங்கும் ரேஞ்சை விட 30கிமீ அதிகமாகும். 4.7kWh பேட்டரி உடன் ஸ்கூட்டரின் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 6 பிஎச்பி மற்றும் 140 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கும். புதிய ஐக்யூப் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து மணிக்கு 40கிமீ வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

இந்த ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 82கிமீ ஆகும். 4.7kWh பேட்டரியை ஏறக்குறைய 4 மணிநேரத்தில் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம். இது, ஐக்யூப் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் 2.2kWh மற்றும் 3.5kWh பேட்டரிகளை சார்ஜ் செய்வதை விட விரைவானது ஆகும். மற்ற வேரியண்ட்களை போன்று, புதிய ஐக்யூப் எஸ் வேரியண்ட்டிலும் ரிவர்ஸ் மோடை பெறலாம்.

குழாய் சட்டகத்தில் வட்வமைக்கப்பட்டுள்ள புதிய ஐக்யூப் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாப் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பணியை கவனிக்க, முன் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரை ஸ்டாண்டர்ட் அல்லது எஸ்டி என இரண்டில் எதில் வாங்குவது என குழம்புவோரின் பிரதானமான தேர்வாக ஐக்யூப் எஸ் விளங்கி வருகிறது. இத்தகைய வேரியண்ட்டை பெரிய அளவிலான பேட்டரி உடன் விற்பனைக்கு கொண்டுவந்திருப்பது நிச்சயம் ஐக்யூப் ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Wednesday, May 6, 2026, 17:36 [IST]
English summary
Tvs motor introduces iqube s electric scooter again with 4 7 kwh battery check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+