இதுக்கு அப்புறம் எத்தனை ஸ்கூட்டர் வேணும்னாலும் வரலாம்... டிவிஎஸ் கம்பெனிக்கு எங்கிருந்துதான் ஐடியா வருதோ!!

2-வீலர் (Two-wheeler) மற்றும் 3-வீலர் (Three-wheeler) வாகனப் பிரிவில் உலக அளவில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனி, இந்தியாவின் முதல் 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர் (Hyper Sport Scooter) ஆக 'டிவிஎஸ் என்டார்க் 150' (Ntorq)-ஐ விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது, இந்தியாவின் இந்த முதல் ஹைப்பர் ஸ்கூட்டரை விளம்பரப்படுத்தும் புதிய மற்றும் அதிரடியான தொலைக்காட்சி விளம்பர காணொளியை டிவிஎஸ் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க்கும் ஒன்றாகும். 125சிசி என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த என்டார்க்கில் புதியதாக 150சிசி என்ஜினை கடந்த 2025 செப்டம்பரில் டிவிஎஸ் மோட்டார் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரப் பிரச்சார வீடியோவில், டிவிஎஸ் என்டார்க் 150 ஒவ்வொரு பயணத்திலும் ஒரு ரேஸ் டிராக்கின் உணர்வை அளிக்கிறது என்ற வலுவான கருத்தை டிவிஎஸ் பதிவு செய்துள்ளது.

tvs ntorq 150 tvc

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யபட்ட புதிய என்டார்க் 150 ஸ்கூட்டரை 'ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்' என அழைக்கிறது. ஏனெனில், அதற்கேற்ப முரட்டுத்தனமான ஸ்போர்டியான டிசைனில், விமானம் போன்றதான வடிவமைப்பில், செயல்திறன்மிக்க பெரிய அளவிலான 150சிசி என்ஜின் உடன் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களுடன் என்டார்க் 150 உருவாக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர் மற்றும் அதிவேகமான 150சிசி ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்ட என்டார்க் 150-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.10 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. வெறும் 6.3 வினாடிகளில் 0-60 கி.மீ வேகத்தை எட்டக்கூடியதாக உருவாக்கப்படுகிறது. ரேஸ் & ஸ்ட்ரீட் என்கிற இரு ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்களையும் புதிய என்டார்க் 150 கொண்டுள்ளது.

tvs ntorq 150 tvc

பல ஆண்டுகளாக, இந்தியாவின் முதல் ப்ளூடூத்-கனெக்டட் ஸ்கூட்டர், 10 PS-க்கு மேல் இயக்க ஆற்றல் கொண்ட முதல் ஸ்கூட்டர் மற்றும் மார்வெலுடன் இணைந்து உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஸ்கூட்டர் எனப் பல சாதனைகளுக்கு சொந்தமான டிவிஎஸ் என்டார்க்கின் புதிய 150சிசி வெர்சன் ஆனது உயர்ந்த செயல்திறன், ஸ்போர்ட்டியான அழகியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் ஒரு சங்கமமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயல்திறனைப் பொறுத்தவரை, என்டார்க் 150 ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம் வேகத்தில் 13.2 பிஎஸ் இயக்க ஆற்றலையும், 5500 ஆர்பிஎம் வேகத்தில் 14.2 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடிய 149.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இது என்டார்க் 125 ஸ்கூட்டரின் 9.5 பிஎஸ் மற்றும் 10.6 என்எம் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினை விட அதிகம் ஆகும்.

tvs ntorq 150 tvc

மேலும், இது 0-60 கிமீ/மணி வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டி, 104 கிமீ/மணி என்கிற உச்சப்பட்ச வேகத்தை அடைகிறது. இந்த ஸ்கூட்டரின் என்ஜின் சிஸ்டத்தில் உள்ள ஐகோ அசிஸ்ட் சிஸ்டம் (iGO Assist System) (ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர்) ஆனது ஒரு மைல்ட் ஹைபிரிட் அமைப்பாகச் செயல்படுகிறது. இது வேகமான ஓவர் டேக்கின்போது எலெக்ட்ரிக் ஆக்ஸலரேஷனையும், ஒரே தொடுதலில் மென்மையான ஸ்டார்ட் செயல்பாட்டையும் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனது செழுமையான பந்தய பாரம்பரியத்தில் இருந்து உத்வேகம் பெற்று, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதிய என்டார்க் 150 ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இது, அந்தப் பிரிவில் ஒரு புதிய பென்ச்மார்க்கை அமைத்து வருகிறது. இதன் மூலமாக இந்த ஸ்கூட்டர், அன்றாடப் பயணங்களுக்கு பந்தய களத்தில் இயங்குவது போன்ற செயல்திறனை எதிர்பார்க்கும் இளம் ரைடர்களை ஈர்த்து வருகிறது. என்டார்க் 150 ஆனது டிவிஎஸ் என்டார்க் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தைக் குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 7, 2026, 15:29 [IST]
English summary
Tvs motor released new tvc for indias fiirst hyper sport scooter ntorq 150
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X