தமிழ்நாட்டிற்கு டிவிஎஸ் கம்பெனி ஒண்ணு போதும்... யமஹா, சுஸுகி எல்லாம் கிட்ட கூட வர முடியாது!

தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலை கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நடந்து முடிந்த கடந்த 2026 மே மாதத்தில் எத்தனை வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் விற்பனை தான் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரதானமான வணிகம் ஆகும். அதேநேரம், மூன்று சக்கர வாகனங்களும் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. 2-வீலர் மற்றும் 3-வீலர் என இரண்டும் சேர்த்து கடந்த மே மாதத்தில் மொத்தம் 5.66 லட்சம் வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.

tvs motor vehicle sales

சரியாக சொல்ல வேண்டுமென்றால், 5 லட்சத்து 66 ஆயிரத்து 585 யூனிட் வாகனங்கள் ஆகும். இதில் டிவிஎஸ் 2-வீலர்களின் பங்களிப்பே அதிகமாகும். எந்த அளவிற்கு என்றால், இதில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 111 டிவிஎஸ் 2-வீலர்கள் அடங்குகின்றன. மீதி 23 ஆயிரத்து 474 வாகனங்கள் மட்டுமே டிவிஎஸ் 3-வீலர்கள் ஆகும்.

இந்த 23,474 டிவிஎஸ் 3-வீலர்களிலும் சில யூனிட்கள் கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். அதேபோல், டிவிஎஸ் 2-வீலர்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது போக, கடந்த மே மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 565 யூனிட்கள் ஆகும்.

tvs motor vehicle sales

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் வெறும் 3 லட்சத்து 9 ஆயிரத்து 287 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை ஆனது 24% அதிகரித்துள்ளது. 2-வீலர்களில் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே எடுத்து பார்த்தால், கடந்த மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 802 பைக்குகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.

2025 மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் கூட 4 லட்சத்து 16 ஆயிரத்து 166 யூனிட்கள் மட்டுமே வருகிறது. ஆனால், இந்த 2026ஆம் ஆண்டின் மே மாதத்தில் 5.43 லட்சத்திற்கும் அதிகமான 2-வீலர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.

Category May 2026 May 2025 Growth
Total Sales 5,66,585 4,31,275 31%
Total Two-Wheelers 5,43,111 4,16,166 31%
Domestic Two-Wheelers 3,84,565 3,09,287 24%
International Business 1,75,991 1,18,437 49%

மேலும், 3-வீலர்கள் மற்றும் 2-வீலர்கள் என இரண்டையும் சேர்த்தும் 2025 மே மாதத்தில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 275 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இதன் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள 5,66,585 டிவிஎஸ் வாகனங்களின் எண்ணிக்கை ஆனது 31% அதிகமாகும்.

வெளிநாட்டு ஏற்றுமதியை பற்றி பார்த்தோமேயானால், 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் என இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 991 வாகனங்களை டிவிஎஸ் ஏற்றுமதி செய்துள்ளது. அதுவே, 2025 மே மாதத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 437 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, டிவிஎஸ் நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி ஆனது சுமார் 49% அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எந்த அளவிற்கு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது என்பதற்கு இந்த புள்ளி விபரங்களே சாட்சியாகும். உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டிலும் டிவிஎஸ் தனது ஆதிக்கத்தை பதிவு செய்து வருகிறது. இது வரும் மாதங்களிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Article Published On: Wednesday, June 3, 2026, 11:16 [IST]
English summary
Tvs motor sold totally more than 5 66 lakh vehicles in may 2026 check all details here
மேலும்... #tvs motor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out