தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த டிவிஎஸ்... ஹீரோ, ஹோண்டா கம்பெனிகளை முந்துவது சாதாரண விஷயம் அல்ல!!
2025 டிசம்பரில் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனி மிகப்பெரிய 2-வீலர் உற்பத்தி நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டிலும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட வலுவான வளர்ச்சியினால் நீண்டகால முன்னணி நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) மற்றும் ஹோண்டா (Honda)-ஐ டிவிஎஸ் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்தது மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என இரண்டையும் சேர்த்து கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் 4,61,071 இருசக்கர வாகனங்களையும், ஹீரோ மோட்டோகார்ப் 4,56,479 வாகனங்களையும், ஹோண்டா 4,46,048, பஜாஜ் ஆட்டோ 3,10,353, சுஸுகி மோட்டார்சைக்கிள் 1,22,366, ராயல் என்ஃபீல்டு 1,03,574 இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்து முதல் 6 இடங்களில் உள்ளன.

அனைத்து நிறுவனங்களும் 2024 டிசம்பர் மாதத்தை காட்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த போதும், சுஸுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களை தவிர மற்றவைகளின் விற்பனை 2025 நவம்பரை விட சரிவை கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையை மட்டும் பொறுத்தவரையில், ஹீரோ மோட்டோகார்ப் 4,19,243 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் முதலிடம் பிடித்தது மட்டுமன்றி, 2024 டிசம்பரை காட்டிலும் 42.53% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
| No | 2 Wheeler Domestic | Dec-25 | Dec-24 | Diff | Growth % YoY | Share % Dec 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Hero | 4,19,243 | 2,94,152 | 1,25,091 | 42.53 | 28.61 |
| 2 | Honda | 3,92,306 | 2,70,919 | 1,21,387 | 44.81 | 26.78 |
| 3 | TVS | 3,30,362 | 2,15,075 | 1,15,287 | 53.60 | 22.55 |
| 4 | Bajaj | 1,32,228 | 1,28,335 | 3,893 | 3.03 | 9.02 |
| 5 | Suzuki | 97,823 | 78,834 | 18,989 | 24.09 | 6.68 |
| 6 | Enfield | 93,177 | 67,891 | 25,286 | 37.24 | 6.36 |
| - | Total | 14,65,139 | 10,56,206 | 4,08,933 | 38.72 | 100.00 |
கடந்த மாதத்தின் ஒட்டுமொத்த 2-வீலர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் 28.61% சந்தைப் பங்கை பெற்ற போதும், 2025 நவம்பரில் விற்கப்பட்ட 5,70,520 ஹீரோ இருசக்கர வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 26.52% சரிந்துள்ளது. ஹோண்டா 3,92,306 யூனிட்கள் விற்பனை உடன் 2024 டிசம்பரை விட 44.81% வளர்ச்சியுடன் உள்நாட்டு விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆக்டிவா (Activa), ஷைன் (Shine) போன்ற மாடல்கள் இதற்கு முக்கிய பங்களித்தன. அதேநேரம், 2025 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாத ஹோண்டாவின் 2-வீலர்கள் விற்பனையில் 26.49% சரிவு ஏற்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் 2024 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 53.60% என்கிற சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
| No | 2 Wheeler Domestic | Dec-25 | Nov-25 | Diff | Growth % MoM | Share % Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Hero | 4,19,243 | 5,70,520 | -1,51,277 | -26.52 | 30.69 |
| 2 | Honda | 3,92,306 | 5,33,645 | -1,41,339 | -26.49 | 28.71 |
| 3 | TVS | 3,30,362 | 3,65,608 | -35,246 | -9.64 | 19.67 |
| 4 | Bajaj | 1,32,228 | 2,02,510 | -70,282 | -34.71 | 10.89 |
| 5 | Suzuki | 97,823 | 96,360 | 1,463 | 1.52 | 5.18 |
| 6 | Enfield | 93,177 | 90,405 | 2,772 | 3.07 | 4.86 |
| - | Total | 14,65,139 | 18,59,048 | -3,93,909 | -21.19 | 100.00 |
ரைடர் (Raider), ஜூபிட்டர் (Jupiter), அப்பாச்சி (Apache) மாடல்களின் வலுவான தேவைக்கு இது முக்கியக் காரணம் ஆகும். இருப்பினும், 2025 நவம்பரில் டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்த 3,65,608 இருசக்கர வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 9.64% குறைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) 1,32,228 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் 2024 டிசம்பரை விட 3.03% வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனால் 2025 நவம்பரை காட்டிலும் 34.71% சரிவைச் சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் கணக்கில் சேர்த்தால், டிவிஎஸ் மோட்டார் 4,61,071 இருசக்கர வாகனங்கள் விற்பனை உடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதுவே, 2024 டிசம்பரில் 3,12,002 இருசக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்திருந்தது.
ஒட்டுமொத்த 2-வீலர்கள் விற்பனையில் டிவிஎஸ் மோட்டாரை மிக நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு ஹீரோ மோட்டோகார்ப் 4,56,479 இருசக்கர வாகனங்களையும், ஹோண்டா 4,46,048 இருசக்கர வாகனங்களையும் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே டிசம்பர் மாதத்தில் இந்த இரு நிறுவனங்கள் முறையே 3,24,906 மற்றும் 3,08,083 இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தன.
| No | 2 Wheeler Total | Dec-25 | Dec-24 | Diff | Growth % YoY | Share % Dec 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | TVS | 4,61,071 | 3,12,002 | 1,49,069 | 47.78 | 24.27 |
| 2 | Hero | 4,56,479 | 3,24,906 | 1,31,573 | 40.50 | 24.03 |
| 3 | Honda | 4,46,048 | 3,08,083 | 1,37,965 | 44.78 | 23.48 |
| 4 | Bajaj | 3,10,353 | 2,72,173 | 38,180 | 14.03 | 16.34 |
| 5 | Suzuki | 1,22,366 | 96,804 | 25,562 | 26.41 | 6.44 |
| 6 | Enfield | 1,03,574 | 79,466 | 24,108 | 30.34 | 5.45 |
| - | Total | 18,99,891 | 13,94,434 | 5,05,457 | 36.25 | 100.00 |
| No | 2 Wheeler Total | Dec-25 | Nov-25 | Diff | Growth % MoM | Share % Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | TVS | 4,61,071 | 4,97,841 | -36,770 | -7.39 | 16.54 |
| 2 | Hero | 4,56,479 | 6,04,490 | -1,48,011 | -24.49 | 4.38 |
| 3 | Honda | 4,46,048 | 5,91,136 | -1,45,088 | -24.54 | 26.33 |
| 4 | Bajaj | 3,10,353 | 3,79,714 | -69,361 | -18.27 | 25.74 |
| 5 | Suzuki | 1,22,366 | 1,22,300 | 66 | 0.05 | 5.33 |
| 6 | Enfield | 1,03,574 | 1,00,670 | 2,904 | 2.88 | 21.68 |
| - | Total | 18,99,891 | 22,96,151 | -3,96,260 | -17.26 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், முதல் 3 இடங்களை பிடித்துள்ள இந்த நிறுவனங்களின் விற்பனை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் அதிகரித்துள்ளது. இதில் இருந்து இந்திய 2-வீலர்கள் சந்தை கடந்த ஒரு வருடத்தில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









