சாலையில் சென்றவர்களுக்கு இது என்ன பைக்னே புரியல! டிவிஎஸ் உருவாக்குதுனு சொன்னா நம்ப முடியுதா?

பிரபல பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் பிராண்டான நார்டன் (Norton), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தின் கீழ் மீண்டும் களமிறங்குகிறது. இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நார்டனை வாங்கிய பிறகு, உலக மோட்டார்சைக்கிள் சந்தையில் வலுவான மறுபிரவேசம் செய்ய காத்திருக்கிறது. நார்டனில் இருந்து வெளிவரவுள்ள நான்கு புதிய வாகனங்களில் ஒன்றான அட்லஸ் ஜிடி (Atlas GT) அட்வென்ச்சர் பைக், தற்போது இந்தியாவில் சோதனை செய்யும்போது மீண்டும் ஸ்பை படங்கள் (Spy Images) வெளியாகியுள்ளன. அதன் விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

நார்டன் அட்லஸ் ஜிடி இந்தியாவில் காட்சி தருவது இது ஒன்றும் முதல்முறையல்ல. முந்தைய ஸ்பை படங்கள், தமிழ்நாட்டில் டிவிஎஸ் வளாகத்தைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் அட்லஸ் ஜிடியின் பின்புறத்தை மறைப்பின்றிக் காட்டியிருந்தன. இந்த நிலையில் தற்போது மிதுன் தேஷ்முக் வெளியிட்டுள்ள புதிய படங்கள் அதன் முன்பக்கத் தோற்றத்தை காட்டுகின்றன.

tvs norton atlas gt spotted

இந்த படங்களில் மறைப்பின்றிக் காணப்பட்ட அட்லஸ் ஜிடி சாலையில் இயங்கும்போது அதன் கம்பீரமான தோற்றத்தை காண முடிகிறது. நார்டன் அட்லஸ் மாடலுக்கும் ஜிடிக்கும் இடையே உள்ள வேறுபாடு சக்கரங்களில்தான். அட்லஸ் வயர்-ஸ்போக் சக்கரங்களைப் பெற, ஜிடி அலாய் சக்கரங்களுடன் வருகிறது. எல்இடி டிஆர்எல் மற்றும் இரு-புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் அமைப்பு புதிய படங்களில் தெரிகிறது.

கார்னரிங் மற்றும் பைக்கிற்கு அடியில் ஒளிரும் விளக்குகள் பார்வைத்திறனுக்கு உதவும். ஹெட்லைட் யூனிட்டுக்கு மேலே உள்ள உயரமான காற்றுத் தடுப்பு விண்ட்ஷீல்டு கண்ணாடி, காற்றைத் தடுத்து சிறந்த பாதுகாப்பை வழங்கும். தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி (USD) முன் ஃபோர்க்குகள், ரீபவுண்ட் மற்றும் கம்ப்ரஷன் இரண்டிற்கும் முழுமையாக சரிசெய்யக்கூடியதாக இருக்கும் எனத் தெரிகிறது. இது ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும்.

tvs norton atlas gt spotted

மஸ்குலரான டேங்க் ஷிரவுடுகள் பைக்கிற்கு பெரிய தோற்றத்தைக் கொடுக்கின்றன. முன்புறத்தில், பைபிரே (ByBre) பிரேக்கிங் ஹார்டுவேருடன் இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது. ஒற்றை இருக்கை, இரட்டை எக்ஸாஸ்ட் முனைகள், என்ஜினைக் குளிர்விக்க ஒரு பெரிய ரேடியேட்டர் ஆகியவற்றையும் ஸ்பைப் படங்கள் காட்டுகின்றன. நார்டன் அட்லஸ் ஜிடி 585சிசி இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது.

இது 270-டிகிரி கிராங்க் ஆஃப்செட் அம்சத்துடன் வருகிறது. இந்த பைக்கின் செயல்திறன் அளவீடுகள் வெளியாகாவிட்டாலும், சுமார் 70 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை எதிர்பார்க்கலாம். அட்லஸ் ஜிடி பைக்கில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள், சாலைக்கு ஏற்ற டயர்களுடன் வருகின்றன. ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய 8-இன்ச் டிஎஃப்டி தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முக்கிய அம்சமாகும். கீலெஸ் கோ சிஸ்டம், புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

6-ஆக்சிஸ் ஐ.எம்.யூ (IMU), மிகவும் உணர்திறன் மிக்க ஏபிஎஸ் (ABS), ஸ்லைடு, டிராக்‌ஷன், கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், லாஞ்ச், வீலி, ஹில் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட கண்ட்ரோல் அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. இவை பைக்கின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் வசதியை கணிசமாக அதிகரிக்கும். மேலும், பைக்கின் கட்டுக்கோப்பான ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃரேம், பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது டிவிஎஸ் மோட்டார்ஸின் கீழ் நார்டன் பிராண்டின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதி ஆகும். ஏனெனில், ஐரோப்பாவில் நார்டன் பிராண்ட் கிட்டத்தட்ட சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனை சரிசெய்யும் விதமாக அட்லஸ், மேங்க்ஸ், மேங்க்ஸ் ஆர் என்கிற நார்டன் பைக்குகளை உலகின் மிக பெரிய பைக் சந்தையான இந்தியாவில் அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. நார்டன் அட்லஸ் ஜிடி இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டு காலக்கெடு மற்றும் இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்பு குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, February 20, 2026, 9:50 [IST]
English summary
Tvs norton atlas gt adv motorcycle spotted in tamilnadu roads check all details here
மேலும்... #tvs motor #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+