அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ்ஸின் புதிய 125 சிசி ஸ்கூட்டர் வெளியானது

ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை டிவிஎஸ்ஸுக்கு உண்டு. கிளாஸியான ஸ்கூட்டராக ஜூப்பிட்டர் வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டாலும், டிவிஎஸ்ஸின் ஸ்போர்ட்டியான என்டார்க் (Ntorq) ஸ்கூட்டருக்கு என்று தனி வாடிக்கையாளர் வட்டம் உண்டு. என்டார்க்கைப் பின்தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் புதுப்புது ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த என்டார்க் 125 ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ்.

2026ம் ஆண்டிற்கான அப்டேட்டாக என்டார்க் 125 ஸ்கூட்டருக்குப் புதிய நிறங்களைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம். கடந்த மாதம் தான் ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை இதே போல் புதிய நிறங்களுடன் அப்டேட் செய்தது டிவிஎஸ். தற்போது அதனைத் தொடர்ந்து என்டார்க்க ஸ்கூட்டரையும் அப்டேட் செய்துள்ளது. இது இந்த ஸ்கூட்டரின் விற்பனையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 TVS Ntorq 125

என்டார்க் 125 ஸ்கூட்டரை டிஸ்க், ரேஸ் XP, ரேஸ் எடிஷன், சூப்பர் ஸ்குவாடு மற்றும் XT என ஐந்து வேரியன்ட்களாக டிவிஎஸ் விற்பனை செய்து வருகிறது. ஐந்தும் ஐந்து விதமான தன்மைகளைக் கொண்டது. இதில் அடிப்படையான டிஸ்க் வேரியன்ட் மற்றும் இடைநிலை ரேஸ் எடிஷன் வேரியன்ட் ஆகிய இரண்டிற்கு மட்டுமே புதிய நிறங்கள் கொடுக்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படையான டிஸ்க் வேரியன்டிற்கு மிட்னைட் பிளாக், ஸ்பிட்டி ஒயிட் மற்றும் நார்டோ கிரே என மூன்று புதிய மற்றும் தனித்துவமான நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நிறத் தேர்வுகளில் மட்டுமே இனி என்டார்க் 125 டிஸ்க் வேரியன்டை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

2026 TVS Ntorq 125

அதேபோல், இடைநிலை ரேஸ் எடிஷன் வேரியன்டிற்கு இன்ஃபெர்னோ ரெட், ஃட்ரிப்ட் ப்ளூ மற்றும் ரஷ் கிரீன் ஆகிய வேறு மூன்று தனித்துவமான நிறங்களைக் கொடுத்துள்ளது. இந்த வேரியன்டை இனி இந்த மூன்று நிறங்களில் மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இந்த இரண்டு வேரியன்ட்களைத் தவிர்த்து மற்ற வேரியன்ட்களில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. அவை முன்பிருந்தபடியே இனியும் தொடரவிருக்கின்றன.

மாற்றங்கள் செய்யப்பட்ட என்டார்க் 125 ஸ்கூட்டரின் டிஸ்க் மற்றும் ரேஸ் எடிஷன வேரியன்ட்களை முறையே 82,500 ரூபாய் மற்றும் 87,950 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த 125 சிசி ஸ்கூட்டரின் டாப் எண்டான XT வேரியன்ட் 1 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 9.3 hp பவர் மற்றும் 10.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் என்டார்க் 125 ஸ்கூட்டரின் ரேஸ் XP வேரியன்டில் மட்டும் இதே இன்ஜின் கூடுதல் பவர் டார்க்கை உற்பத்தி செய்யும் ட்யூனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரேஸ் XP வேரியன்டில் இதே இன்ஜின் 10 hp பவர் மற்றும் 10.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும், ஹோண்டா டியோ 125, ஹீரோ ஸூம் 125, சுஸூகி அவெனிஸ், யமஹா ரேஸிஆர் 125 மற்றும் ஏப்ரிலியா SR 125 உள்ளிட்ட ஸ்போர்ட்டியான 125 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இந்த டிவிஎஸ் என்டார்க் 125 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல இந்த சிறிய அப்டேட் என்டார்க் 125 ஸ்கூட்டர் இன்னும் அதிகம் விற்பனையாவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய நிறங்கள் பார்த்தவுடனே வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலேயே இருக்கின்றன. மெக்கானிக்கலாக மற்றும் வசதிகள் ரீதியாக புதிய அப்டேட்டில் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, June 26, 2026, 15:28 [IST]
English summary
Tvs ntorq 125 scooter updated with new colours for 2026
மேலும்... #tvs motor #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out