டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டருக்கு புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், இளைஞர்களைக் கவரும் வகையில் டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 150 ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த ஸ்கூட்டருக்கு புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டருக்கு தற்போது ஸ்பெக்ட்ரல் கிரீன் (Spectral Green) என்ற புதிய வண்ணத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வண்ணத் தேர்வு ஸ்கூட்டரின் தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாக மாற்றுகிறது. குறிப்பாக தனித்துவமான வண்ணத் தேர்வை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பானதாக அமையும்.

TVS NTorq 150

இந்த புதிய ஸ்பெக்ட்ரல் கிரீன் வண்ணத் தேர்வானது என்டார்க் 150 ஸ்கூட்டரின் டிஎஃப்டி (TFT) வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த புதிய வண்ணத் தேர்வு இடம்பெற்றுள்ளது. கடந்த மாதமே டீலர்ஷிப் ஒன்றில் இந்த வண்ணத் தேர்வுடன் என்டார்க் 150 ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விற்பனைக்காக அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அடர் ஆலிவ் பச்சை நிறம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. முன்பக்க மட்கார்டு மற்றும் பின்புற பகுதியில் புளோரசன்ட் மஞ்சள் நிற அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்பல் மற்றும் மஞ்சள் நிறத்தில் என் டார்க் 150 கிராபிக்ஸும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய வண்ணத்தின் மற்றொரு தனித்துவம் கருப்பு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read

இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட நைட்ரோ கிரீன், ரேசிங் ரெட் மற்றும் டர்போ ப்ளூ ஆகிய வண்ணங்களில் அந்தந்த நிறத்துக்கு ஏற்ற வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஸ்பெக்ட்ரல் கிரீன் நிறத்தில் மட்டும் கருப்பு நிற வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது.

எஞ்சின் மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 149.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், மூன்று வால்வு, ஏர் கூல்டு எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 13.2 எச்பி பவரையும், 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Also Read

இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 104 கிமீ வேகத்தில் செல்லும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது. மேலும், 0 முதல் 60 கிமீ வேகத்தை வெறும் 6.3 விநாடிகளில் எட்டிவிடும் என்றும் நிறுவனம் கூறுகிறது. இதன் எடை 115 கிலோவாகவும், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 5.8 லிட்டராகவும் இருக்கிறது.

வசதிகளைப் பொறுத்தவரை 5 இன்ச் டிஎஃப்டி திரை, ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம், 60-க்கும் மேற்பட்ட இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அலெக்சா மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு, நேரடி வாகன இருப்பிட கண்காணிப்பு, வழிகாட்டுதல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்ட்ரீட் மற்றும் ரேஸ் என இரண்டு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பின்பக்க சக்கரம் வழுக்கிச் செல்வதை கட்டுப்படுத்த டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, ஒற்றை சேனல் ஏபிஎஸ், முன்புற டிஸ்க் பிரேக், முழுமையான எல்இடி விளக்குகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதன் முன்புறத்தில் குவாட் எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை இரவு நேரப் பயணங்களுக்கும் கூடுதல் உதவியாக இருக்கும்.

இந்த புதிய வண்ணத் தேர்வு மூலம் டிவிஎஸ் என டார்க் 150 ஸ்கூட்டர் இன்னும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. புதிய வண்ணத் தேர்வு அறிமுகமானாலும் விலையில் மாற்றமில்லை. ஸ்பெக்ட்ரல் கிரீன் டிஎஃப்டி வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,22,100 ஆகவும், சாதாரண வேரியண்ட் ரூ.1,12,900 என்ற விலையிலும் கிடைக்கிறது.

Article Published On: Wednesday, November 11, 2026, 12:42 [IST]
English summary
Tvs ntorq 150 spectral green colour launched price features
மேலும்... #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out