பெர்ஃபாமன்ஸுல இந்த ஸ்கூட்டரை அடிச்சிக்கவே முடியாது.. விலையும் ரொம்ப கம்மி.. உடனே போய் புக் பண்ணுங்க!

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் எதுவென்று தெரியுமா. சந்தேகத்திற்கு இடமின்றி அது டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) தான். எரிபொருள் ஸ்கூட்டர்களில் நான்காவது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருந்து வருகிறது என்டார்க். ஒட்டுமொத்தமாக எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என அனைத்தையும் எடுத்துக் கொண்டால், ஆறாம் இடத்தில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்தம் 33,994 என்டார்க் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 33.92 சதவீதம் அதிக விற்பனையாகும். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 25,282 என்டார்க் ஸ்கூட்டர்களையே டிவிஎஸ் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TVS Ntorq 125

இந்த ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்ததற்கு வேறொரு காரணமும் இருக்கலாம் எனத் தெரிகிறது. என்டார்க் ஸ்கூட்டர் மீது வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்தது மட்டுமின்றி, புதிய என்டார்க் ஸ்கூட்டர் ஒன்று களமிறங்கியதும் இந்த விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் என்டார்க் 125 ஸ்கூட்டரை மட்டுமே இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்து வந்தது. ஆனால் இப்போது என்டார்க் 150 ஸ்கூட்டரும் சேர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இந்த 150 சிசி கொண்ட என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் டிவிஎஸ் வெளியிட்டது. இந்தப் புதிய என்டார்க்கின் வெளியீடும் கூடுதல் விற்பனைக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

TVS Ntorq 150

என்டார்க் 150-யை விட பிரபலமானதும், வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய ஸ்கூட்டருமாக என்டார்க் 125 ஸ்கூட்டரே இருந்து வருகிறது. ஐந்து வேரியன்ட்களாக இந்த 125 சிசி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். டிஸ்க், ரேஸ் எடிஷன், சூப்பர் ஸ்குவாடு எடிஷன், ரேஸ் XP மற்றும் XT என ஐந்து வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 81,750 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஸ்போர்ட்டியான 125 சிசி ஸ்கூட்டரை நாம் வாங்கலாம்.

என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது அதிகபட்சமாக 10.06 hp பவர் மற்றும் 10.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கிறது. சுஸூகி அவெனிஸ், ஹீரோ ஸூம் 125, ஹோண்டா டியோ 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இந்த என்டார்க் 125 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

என்டார்க் 150 ஸ்கூட்டரானது 1.11 லட்சம் ரூபாய் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 149 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 13.2 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 150 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக என்டார்க் 150 விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் ஒன்று வாங்க வேண்டுமென்றால் மக்களின் முதல் சாய்ஸ் டிவிஎஸ் என்டார்க்காகத் தான் இருக்கிறது. அதுவும் 125 சிசி பிரிவில் என்டார்க்கையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். என்டார்க் 150 புதிதாக வெளியான ஸ்கூட்டர் என்றாலும் வாடிக்கையாளர்களிடம் கணிசமான அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதை மறுக்க முடியாது. மேலும் 125 சிசி ஸ்கூட்டர்களை விட கொஞ்சம் மட்டுமே கூடுதல் விலையை என்டார்க் 150 கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, May 23, 2026, 17:03 [IST]
English summary
Tvs ntorq scooter sales report april 2026 how much increased compared to previous year
மேலும்... #tvs #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+