ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகையே மிரள விட்ட தமிழ்நாட்டு நிறுவனம்! மார்க்கெட்டை மொத்தமா வளச்சு போட்டுட்டாங்க

தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் (TVS). உலகளாவிய டூவீலர் விற்பனையில் ஜப்பானை சேர்ந்த யமஹா (Yamaha) நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, டிவிஎஸ் நிறுவனம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

யமஹா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக 4.96 மில்லியன் (49.60 லட்சம்) டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 மில்லியனாக (50 லட்சம்) மட்டுமே உயர்ந்துள்ளது. இது வெறும் 0.8 சதவீத வளர்ச்சி மட்டுமே.

TVS iQube Side View

எனவே உலக அளவில் அதிக டூவீலர்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், யமஹா 4வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. ஆனால் டிவிஎஸ் நிறுவனம் விற்பனையில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சியின் மூலமாக 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் 4.52 மில்லியன் (45.20 லட்சம்) டூவீலர்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.46 மில்லியனாக (54.60 லட்சம்) உயர்ந்துள்ளது. இது 20.7 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக யமஹா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, டிவிஎஸ் நிறுவனம் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம் முதல் 2 இடங்களில் முறையே ஜப்பானை சேர்ந்த ஹோண்டா (Honda) மற்றும் இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

TVS iQube

ஹோண்டா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் 15.51 மில்லியன் (1.55 கோடி) டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 16.44 மில்லியனாக (1.64 கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலம் 6 சதவீத வளர்ச்சியுடன், உலக அளவில் அதிக டூவீலர்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ஹோண்டா முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த வரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு 5.94 மில்லியன் (59.40 லட்சம்) டூவீலர்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2025ம் ஆண்டில் 6.25 மில்லியனாக (62.50 லட்சம்) உயர்ந்துள்ளது. இதன் மூலம் 5.2 சதவீத வளர்ச்சியுடன் ஹீரோ மோட்டோகார்ப் 2வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து ஆட்டோகார் ப்ரொஃபஷனல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: யமஹா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டிவிஎஸ் நிறுவனம் 3வது இடத்திற்கு முன்னேறியிருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவது மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை விரிவாக்கம் போன்றவற்றை இதற்கு முக்கியமான காரணமாக கூறலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பிடித்து விடுகிறது. இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையையும், டிவிஎஸ் ஐக்யூப் கொண்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி ஒரு பக்கம் பெருமிதம் அளிக்கும் நிலையில், உலக அளவில் அதிக டூவீலர்களை விற்பனை செய்த டாப் 3 நிறுவனங்களில் பட்டியலில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் என 2 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2026, 10:26 [IST]
English summary
Tvs overtakes yamaha in global two wheeler sales check all details here
மேலும்... #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+