LED விளக்குகள், புதிய வண்ணத் தேர்வுகளில் 2026 டிவிஎஸ் ரேடியான் பைக் அறிமுகம்... விலை ரூ.67,100 முதல்!

இந்தியாவில் தினசரி அலுவலகப் பயணம் மற்றும் குடும்பத் தேவைகளுக்காக பைக் வாங்குபவர்கள் மத்தியில் 100 சிசி முதல் 110 சிசி வரையிலான கம்யூட்டர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறைவான விலை, எளிமையான பராமரிப்பு, நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டும் வசதி ஆகியவை இந்தப் பிரிவின் முக்கிய அம்சங்கள். இந்நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் பைக்கை 2026ஆம் ஆண்டுக்கான அப்டேட்டுகளுடன் புதிய தோற்றத்துடன் புதுப்பித்துள்ளது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.67,100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாடலில் LED விளக்குகள், புதிய வண்ணக் கலவைகள் மற்றும் புதிய கிராபிக்ஸ் டிசைன் அலங்காரங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. அதே நேரத்தில், ஏற்கெனவே வாடிக்கையாளர்களுக்குப் பரிச்சயமான எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் அமைப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தப் பைக்கின் வசதிகள் மற்றும் விலை விவரங்களைப் பார்க்கலாம்.

TVS Radeon

புதிய LED விளக்குகள்

2026ம் ஆண்டு மாடல் புதிய ரேடியான் பைக்கில் புதிய LED ஹெட்லைட் மற்றும் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பகல்நேர விளக்குகள் (DRL) வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் ஆறு செங்குத்தான ஒளிப் பகுதிகளைக் கொண்ட LED டெயில் லைட் அமைப்பு இடம்பெற்றுள்ளது. முன்புறம், பின்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் LED இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வண்ணத் தேர்வுகளில் கருப்பு மற்றும் சிவப்பு, கருப்பு மற்றும் நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய கலவைகள் இடம்பெற்றுள்ளன. வேரியண்ட்டைப் பொறுத்து வண்ணங்கள் மாறுபடும். பெட்ரோல் டேங்க், முகப்பு விளக்குக் கவர் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் புதிய கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. நீளமான ஒற்றை இருக்கை, பின்புற லக்கேஜ் ரேக், 18 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

Also Read

எஞ்சின்

இந்தப் பைக்கில் 109.7 சிசி, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.08 எச்பி திறனையும் 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. நகரப் போக்குவரத்தில் எளிதாகப் பயணிக்க உதவும் Glide Through Technology (GTT) மற்றும் எந்த கியரிலும் செயல்படும் இயங்கும் ஸ்டார்ட் வசதியும் இதில் உள்ளன.

மேலும், சின்க்ரனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் ஐந்து நிலைகளில் சரிசெய்யக்கூடிய பின்புற இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அன்றாடப் பயணத்திற்கு உதவும் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன.

Also Read

2026 டிவிஎஸ் ரேடியான் விலை

புதிய ரேடியான் பைக்கின் BASE வேரியண்ட் ரூ.67,100 எக்ஸ்ஷோரூம் விலையிலும், DIGI DRUM வேரியண்ட் ரூ.70,100 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கும் DIGI DISC வேரியண்ட்டின் விலை ரூ.73,100 ஆக உள்ளது.

குறைந்த விலையில் பைக் வாங்க விரும்புபவர்கள் BASE வேரியன்ட்டைப் பரிசீலிக்கலாம். டிஜிட்டல் வசதிகள் தேவைப்படுபவர்கள் DIGI DRUM மாடலையும், டிஸ்க் பிரேக் விரும்புபவர்கள் DIGI DISC மாடலையும் தேர்வு செய்யலாம். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதால், காப்பீடு மற்றும் பதிவு கட்டணங்கள் சேரும்போது ஆன்-ரோடு சற்று கூடுதலாக இருக்கும்.

புதிய LED விளக்குகள் மற்றும் வண்ண அலங்காரங்கள் மூலம் ரேடியான் பைக் புதுப்பொலிவுடன் வந்துள்ளது. எஞ்சினில் மாற்றங்கள் இல்லை என்றாலும், அன்றாடப் பயன்பாட்டிற்கான மலிவான பைக்கைத் தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். பண்டிகை காலத்தில் கம்ப்யூட்டர் பைக்கை வாங்குவோர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

Article Published On: Monday, October 12, 2026, 11:15 [IST]
English summary
Tvs radeon 2026 led headlight new colours launched india price features specifications
மேலும்... #new launches #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out