லிட்டருக்கு 60கிமீ மைலேஜை வாரி தரும் டிவிஎஸ் பைக்... ஹீரோ, பஜாஜ் பைக்குகளை விட காந்தம் போல் மக்களை ஈர்க்குது!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) அதன் ரைடர் 125 பைக்கின் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. அது என்னவென்றால், 2021ஆம் ஆண்டு அறிமுகத்தில் இருந்து இதுவரையில் சுமார் 19 லட்சத்திற்கும் அதிகமான ரைடர் 125 பைக்குகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்தும், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் 100சிசி பைக்குகள் தற்சமயம் மிகவும் சில மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. மற்றப்படி, குறைந்த சிசி என்ஜின் கொண்ட பைக்குகள் என்றாலே அது 125சிசி பைக்குகளாக மாறிவிட்டன. இளம் வாடிக்கையாளர்களை கவரும் விதமான ஸ்டைலிஷான தோற்றத்தில் 125சிசி பைக்குகள் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பைக் பிராண்ட்களிலும் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றன.

tvs raider 125 sales milestone

அவ்வாறு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஸ்டைலான 125சிசி பைக் தான், ரைடர் ஆகும். இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான 125சிசி பைக்குகளை அறிமுகம் செய்யும் டிரெண்டை ரைடர் 125 பைக் மூலம் ஆரம்பித்து வைத்ததே டிவிஎஸ் மோட்டார் தான். 2021ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரைடர் 125 அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வகையில் பார்த்தால், ரைடர் 125 பைக்கை அறிமுகம் செய்து 5 வருடங்களுக்கு உள்ளாகவே அதனை டிவிஎஸ் நிறுவனம் 19 இலட்சம் யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரைடர் 125 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

tvs raider 125 sales milestone

இன்னும் தெளிவாக பார்த்தோமேயானால், ஒவ்வொரு நாளும் ஆயிரத்தில் இருந்து 1,300 பேர் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை வாங்குகின்றனர். இந்த தொகுப்பை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட நாட்டில் எங்கேனும் ஒரு மூலையில் யாராவது ஒருவர் ரைடர் 125 பைக்கை வாங்கிக் கொண்டிருப்பார் என்பதால், 19 இலட்சம் யூனிட்கள் விற்பனை என்கிற மைல்கல்லை கடந்து டிவிஎஸ் நிறுவனம் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த 19 இலட்சம் ரைடர் 125 பைக்குகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 16.2 லட்சம் யூனிட்கள் ஆகும். மீதி 2.86 லட்சம் யூனிட்கள் ஆனது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரைடர் 125 பைக்குகளின் எண்ணிக்கை ஆகும். டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மற்ற எந்த பைக்குகளை விடவும் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் பைக் மாடலாக ரைடர் 125 விளங்குகிறது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தற்சமயம் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனையாகும் மூன்றில் ஒரு பைக் ஆனது ரைடர் 125 ஆகும். குறிப்பாக, 2024ஆம் ஆண்டு ரைடர் 125 பைக்குகள் விற்பனையில் முக்கியமான ஆண்டாக அமைந்தது. ஏனெனில் அந்த ஆண்டில்தான் அதுவரையில் சுமாராக விற்பனையாகி கொண்டிருந்த ரைடர் 125 பைக்கின் விற்பனை பெரிய அளவிற்கு எழுச்சி கண்டது.

தற்சமயம் ரூ.98,550 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படும் ரைடர் 125 பைக்கில் 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8.37 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 11.75 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகிற செப்டம்பர் மாதம் வந்தால், ரைடர் 125 பைக் அறிமுகம் செய்யப்பட்டு 5 வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த பைக்கின் விற்பனையில் 20 இலட்சம் என்கிற மைல்கல்லை டிவிஎஸ் கடந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இன்னமும் டிவிஎஸ் மோட்டாரின் சிறந்த விற்பனை பைக்குகளாக அப்பாச்சி (Apache) பைக்குகள் தொடர்கின்றன. இதுவரையில் 20.7 லட்சம் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Article Published On: Tuesday, May 12, 2026, 21:59 [IST]
English summary
Tvs raider 125 overall sales crossed 19 lakh milestone check all details here
மேலும்... #tvs motor #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+