அசத்தலான வசதிகளுடன் அப்டேட் ஆகியிருக்கும் டிவிஎஸ் பைக்.. தரமான வசதிகளைக் கொடுத்து மிரட்டி விட்டாங்க போங்க!
இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் 125 சிசி பைக்காக ரெய்டர் இருக்கிறது. தற்போது 125 சிசி பிரிவு அதிக பைக்குகள் விற்பனை செய்யப்படும் ஒரு பிரிவாக இருக்கிறது. ஹோண்டா CB 125 ஹார்னெட், ஹீரோ எக்ஸ்ட்ராம் 125R மற்றும் பஜாஜ் பல்சர் NS125 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இந்த டிவிஎஸ் ரெய்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்கூறிய பைக் மாடல்கள் எல்லாம் இளைஞர்களைக் கவரும் வகையில் மிகவும் ஸ்போர்ட்டியான டிசைனுடன், கண்களை ஈர்க்கும் வண்ணங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுடன் ஒப்பிடும் போது கம்யூட்டரின் அப்கிரேடட் வெர்ஷன் போலத் தான் டிவிஎஸ்ஸின் ரெய்டர் இருக்கிறது. இதனால் இந்த பைக்கை மற்ற பைக் மாடல்களுடன் போட்டியிடும் வகையில் மாற்ற பல்வேறு வகையிலும் மேம்பட்ட அம்சங்களைக் கொடுத்து தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது டிவிஎஸ்.

தற்போது இந்த பைக்கிற்கு புதிய நிறத்தைக் கொடுத்து அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. புதிதாக நைட்ரோ கிரீன் என்ற நிறத்தை ரெய்டர் பைக்கிற்கு டிவிஎஸ் கொடுத்துள்ளது. இதனைப் பார்க்கும் போதே வித்தியாசமாக இருக்கும் நிலையில், எங்கோ பார்த்தது போலான உணர்வையும் கொடுக்கிறது. வேறெங்கும் இல்லை, ஹோண்டா CB125 ஹார்னெட் பைக்கிலும் இதே போன்ற ஒரு நிறம் உள்ளது. அந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பியர்ல் சைரன் ப்ளூ வித் லெமன் ஐஸ் யெல்லோ நிறத்தை ஒற்றிருக்கிறது ரெய்டரின் நைட்ரோ கிரீன் நிறம்.
இது போன்ற பார்த்ததும் கண்களைக் கவரும் வகையில் இருக்கும் நிறங்களை இப்போதிருக்கும் இளைஞர்கள் நிறையவே விரும்புகிறார்கள். எனவே அவர்களைக் கவரும் வகையில் இந்த நிறத்தை டிவிஎஸ் தங்கள் 125 சிசி பைக்கில் அறிமுகப்படுத்தியருப்பதாகத் தெரிகிறது. ரெய்டர் 125 பைக்கை ஏழு வேரியன்ட்களாக டிவிஎஸ் விற்பனை செய்து வரும் நிலையில், டாப் எண்டான SXC DD மற்றும் TFT DD ஆகிய இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே இந்தப் புதிய நிறத்துடன் கூடிய ரெய்டர் பைக்கை நாம் வாங்க முடியும்.

SXC DD வேரியன்டானது ரூ.96,725 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், டாப் எண்டான TFT DD வேரியன்டானது ரூ.98,550 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது. பெயரில் உள்ளது போல SXC DD வேரியன்டில் டிவிஎஸ்ஸின் ஸ்மார்ட் கனெக்ட் வசதியுடன் கூடிய LCD டிஸ்பிளேவும், டூயல் டிஸ்க் பிரேக் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கும். TFT DD வேரியன்டில் ஒருபடி அதிகமாக TFT கலர் டிஸ்பிளேவும், டூயல் டிஸ்க் பிரேக் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கும்.
இவற்றைத் தவிர வசதிகள் ரீதியாகவோ, மெக்கானிக்கலாகவோ புதிய ரெய்டர் 125 பைக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக்கில் 11.38 hp பவர் மற்றும் 11.75 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ ஆயில் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் LED முகப்பு விளக்கு, மேலே கூறியது போல டூயல் டிஸ்க் பிரேக் செட்டப், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், ஃபாலோ மீ முகப்பு விளக்கு, சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் வித் இன்ஜின் கட்-ஆஃப் மற்றும் கிளைடு த்ரூ ட்ராஃபிக் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட வசதிகளை டிவிஎஸ் வழங்கியிருக்கிறது. டிவிஎஸ்ஸுக்கு அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக இந்த ரெய்டர் 125-ம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 125 சிசி பைக்கை வாங்கும் போது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பரிசீலனையில் வைத்திருக்கும் ஒரு பைக் மாடலாகவே டிவிஎஸ் ரெய்டர் இருக்கிறது. இந்தப் புதிய நிறம் இளம் தலைமுறையினரை ஈர்க்கவே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் போட்டியாளர்களை சமாளிக்க புதிது புதிதாக அம்சங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ரெய்டர் சிறப்பாகவே செயல்படுகிறது.
வசதிகள், பெர்ஃபாமன்ஸ், மைலேஜ், டிசைன் என அனைத்து வகையிலும் சிறப்பான ஒரு பைக்காக இருப்பதால் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு பைக் மாடலாக இந்த ரெய்டர் 125 இருந்து வருகிறது. தற்போது புதிய நிறம் கொடுக்கப்பட்டிருப்பது, ரெய்டர் 125 பைக்கை வாங்க மேலும் ஒரு காரணத்தைக் கொடுத்திருக்கிறது அவ்வளவு தான்.


Click it and Unblock the Notifications