பெங்களூரு நிறுவனத்தை ஓட விட்ட தமிழ்நாட்டு நிறுவனம்.. இனி நாங்க தான் எல்லாம்!

ஓலாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது நிறுவனமாகியிருக்கிறது டிவிஎஸ். தற்போது ஓலாவின் சாம்ராஜ்யம் சரிந்திருக்கும் நிலையில், டிவிஎஸ் தான் இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிறுவனமாக இருக்கிறது. ஜூன் 11ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் மொத்தமாக 10.04 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

6.5 ஆண்டுகளில் இந்த சாதனையைப் படைத்திருக்கிறது டிவிஎஸ். இந்தியாவில் தற்போது ஐக்யூப் (iQube) மற்றும் ஆர்பிட்டர் (Orbiter) என்ற இரண்டு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரண்டும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10 லட்சம் யூனிட்டுகளை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

TVS Orbiter

10 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தாலும், ஒவ்வொரு லட்சம் விற்பனையாவதற்கும் எடுத்துக் கொண்ட கால அளவு தான் சுவாரஸ்யமானவை. ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்தாண்டு தான் டிவிஎஸ் வெளியிட்டது. அதற்கு முன்பு வரை ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டும் தான். முதல் ஒரு லட்சம் யூனிட்டுகள் விற்பனையாவதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டது ஐக்யூப்.

ஐக்யூப் அவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என்று சொல்வதை விட, எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையே அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது. எனவே ஐக்யூப் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டதில் ஆச்சரியமேதும் இல்லை. ஆனால் அடுத்த நான்கு லட்சம் யூனிட்டுகள், இரண்டு ஆண்டுகளிலேயே வந்துவிட்டது.

TVS iQube

முதல் ஐந்து லட்சம் யூனிட்டுகள் விற்பனையாவதற்கு ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த ஐந்து லட்சம் யூனிட்டுகள் விற்பனையானது கடந்த 16 மாதங்களில் வந்திருக்கிறது. அதாவது, ஒன்றரை ஆண்டுகளுக்கும் குறைவான காலக்கட்டத்தில் அடுத்த ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

கடைசி ஒரு லட்சம் யூனிட்டுகள் விற்பனையானது வெறும் 75 நாட்களில் தான். அதாவது இரண்டரை மாதங்களில் விற்பனையாகிவிட்டது. இன்னும் வரும் மாதங்களில் டிவிஎஸ்ஸின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அளவு இன்னும் வேகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த சில ஆண்டுகளிலேயே மாதம் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போது நாளொன்றுக்கு 1,361 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இதே வேகத்தில் செல்லும் பட்சத்தில் 2026ம் ஆண்டு மட்டும் 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை என்ற அளவை முதல் முறையாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு தொடகத்தில் இருந்து இப்போது வரை 2.19 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையுமே கூட இந்தாண்டு புதிய விற்பனை மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025ம் ஆண்டு 12.8 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகிய நிலையில், இந்தாண்டு முதல் முறையாக அந்த அளவு 20 லட்சத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் மட்டுமின்றி, பஜாஜ் (சேட்டக்), ஏத்தர் எனர்ஜி, ஹீரோ (விடா) ஆகிய நிறுவனங்களும் சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அளவையே இந்தாண்டு பதிவு செய்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்போது முதல் 1,000, முதல் 1 லட்சம் மற்றும் முதல் 10 லட்சம் ஆகிய அளவுக்குக் தான் நிறைய காலம் எடுத்துக் கொள்ளும். அதன்பின்பு வளர்ச்சி விகிதம் மிகவும் வேகமாக இருக்கம். அந்த வகையில் டிவிஎஸ் மற்றும் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை இரண்டுக்குமே இந்த 2026ம் ஆண்டு ஒரு முக்கியமான மைல்கல் ஆண்டாக இருக்கும்.

Article Published On: Thursday, June 11, 2026, 13:16 [IST]
English summary
Tvs reaches 10 lakh electric scooter sales milestone after ola
மேலும்... #tvs #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out