110 கிமீ மைலேஜ் கொடுக்கக்கூடிய அடிமாட்டு விலையில் விற்பனை செய்யப்படும் பைக்.. இதனை வாங்கலாமா?

இந்திய வாடிக்கையாளர்கள் தங்கத்திற்கு அடுத்தபடியாக அதிகம் விரும்புவது பைக்கின் மைலேஜைத் தான். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு பைக் அதிக மைலேஜ் கொடுக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பைக்கை இந்திய வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும். எனவே தான் முடிந்த அளவிற்கு குறைவான பெட்ரோலைப் பயன்படுத்தும் வகையிலான பைக் இன்ஜினை உருவாக்குவதில் இந்தியாவில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.

அப்படி இந்தியாவில் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport). ஹீரோ ஸ்ப்ளெண்டர் மற்றும் ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் நிறைய நேரங்களில் வாடிக்கையாளர்களின் பரிசீலனைக்கே வராமல் போய் விடுகிறது டிவிஎஸ்ஸின் இந்த கம்யூட்டர் பைக் மாடல்.

TVS Sport

அதிக மைலேஜ் கொடுப்படு மட்டுமல்ல மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஒரு பைக்காகவும் இந்த டிவிஎஸ் ஸ்போர்ட் இருக்கிறது. ஆம், இப்போது இந்தியாவில் மிக மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த டிவிஎஸ் ஸ்போர்ட் தான் சிறந்த சாய்ஸ். இந்த ஸ்போர்ட்டியான, அதிக மைலேஜ் கொடுக்கக்கூடி, குறைவான விலை கொண்ட கம்யூட்டர் பைக்கைப் பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.

முன்னதாக 100 சிசி இன்ஜினுடனேயே இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் அதனை 110 சிசியாக டிவிஎஸ் அப்டேட் செய்தது. இந்த பைக்கில் 109.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 8.1 hp பவர் மற்றும் 8.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

TVS Sport

இந்த பைக் அதிக மைலேஜ் கொடுக்கும் என நாம் மேலே கூறியிருந்தோம். லிட்டருக்கு சுமார் 80 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் திறனை இந்த பைக் கொண்டுள்ளது. இது ARAI அமைப்பால் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட மைலேஜ் அளவு என்பது குறிப்பிடத்தக்கது. தினசரிப் பயன்பாட்டில் லிட்டருக்கு 65 கிமீ முதல் 70 கிமீ வரையிலான மைலேஜை இந்த பைக்கில் தாராளமாகப் பெற முடியும்.

இந்த பைக்கை BS6 விதிமுறைக்கு ஏற்ப அப்டேட் செய்த பின்பு, 2020ல் பவிட்ரா பட்ரோ (Pavitra Patro) என்ற வாடிக்கையாளர் இந்த பைக்கைப் பயன்படுத்தி பயணம் செய்து, லிட்டருக்கு 110.12 கிமீ மைலேஜைப் பதிவு செய்து சாதனையையும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இந்த மைலேஜ் அளவைப் பதிவு செய்ததற்காக ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் அது பெரியளவில் தடைகள் இல்லாமல், ஒரே ட்ராக்கில், ஒரே அளவிலான வேகத்தில் ஓட்டிய போது கிடைத்த மைலேஜ் அளவாகும். நம்முடைய தினசரிப் பயன்பாட்டில் அதே அளவிலான மைலேஜை நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும் பக்குவமாக ஓட்டினால் அதிகளவிலான மைலேஜைக் கூட இந்த பைக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பெறலாம்.

அதிக மைலேஜ் மட்டுமின்றி மிகவும் குறைவான விலை கொண்ட பைக் இந்த டிவிஎஸ் ஸ்போர்ட் எனவும் மேலே கூறியிருந்தோம். இந்த பைக்கை ES, ES பிளஸ் என இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். ES வேரியன்டை 57,950 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ES பிளஸ் வேரியன்டை 59,950 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறப்பான கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாக இந்த டிவிஎஸ் ஸ்போர்ட்டையும் நிச்சயமாக நம்மால் கூற முடியும். ஸ்ப்ளெண்டர் அல்லது ஷைன் பைக்குகளுக்கு மாற்றாக குறைவான விலையில் ஒரு பைக்கைத் தேடினால் இந்த ஸ்போர்ட் பைக்கையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். பின்னர் இதனை வாங்கலாமா அல்லது வேறு பைக்கை வாங்கலாமா என்று முடிவு செய்யுங்கள்.

Article Published On: Monday, May 25, 2026, 17:28 [IST]
English summary
Tvs sport is the high mileage low price bike on sale in india should you buy this
மேலும்... #tvs motor #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out