80 கிமீ மைலேஜ் தரும் பைக்கை செல்போன் விலையில் விக்கும் டிவிஎஸ்! ஹீரோ, ஹோண்டாவை கதற விட போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport). கடந்த 2007ம் ஆண்டு டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக், இந்திய சந்தையில் தனது செல்வாக்கை இழக்க தொடங்கியுள்ளது.
நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9,067 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 10,905 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது 1,838 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16.85 சதவீத வீழ்ச்சி ஆகும். டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மாதாந்திர ரீதியிலான விற்பனை 16.85 சதவீதம் குறைந்துள்ள நிலையில், வருடாந்திர ரீதியிலான விற்பனை, அதை விட மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12,895 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 9,067 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்த வகையில் 3,828 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

இது 29.69 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கம்யூட்டர் ரக பைக்குகளில் ஒன்றாக டிவிஎஸ் ஸ்போர்ட் உள்ளது. தற்போதைய நிலையில் இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 65,750 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 67,250 ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை அனைத்துமே டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் 109.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வரை வழங்குவதாக, இதை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் பைக் மற்றும் சாலையின் கண்டிஷன், பைக்கை ஓட்டும் விதம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற விஷயங்களை எல்லாம் பொறுத்து, மைலேஜ் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina), ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், டிவிஎஸ் ஸ்போர்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
தற்போது விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, வரும் மாதங்களில், டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் 'டிமாண்ட்' உருவாக தொடங்கியுள்ளது. இது டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கிற்கு சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications