வெளிநாட்டுக்காரங்க ஏன் இந்த பைக்க இப்படி பறந்து பறந்து வாங்குறாங்கன்னு தெரியலையே.. அப்படி இதுல என்ன இருக்கு!

இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் எப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனவோ, அப்படி நிறைய வெளிநாடுகளிலும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கை ஓங்கியிருக்கிறது. குறிப்பாக டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் நிறைய பைக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. அப்படி கடந்த நிதியாண்டு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகள் குறித்த தரவுகள் இப்போது வெளியாகியிருக்கின்றன.

இப்போது நாம் பார்க்கப் போவது கடந்த 2026ம் நிதியாண்டில், அதாவது 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகளின் அளவு தான். இதில் முதலிடத்தில் இருக்கும் பைக்கே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. முதலிடத்தில் இருப்பது எந்த பைக் தெரியுமா? டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி.

TVS Star City Plus

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் ஒரே ஒரு யூனிட் மட்டுமே இந்த ஸ்டார் சிட்டி பைக் விற்பனையாகியிருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டு சுமார் 7.20 லட்சம் யூனிட்டுகள் வரை ஸ்டார் சிட்டி 125 பைக்கை டிவிஎஸ் ஏற்றுமதி செய்துள்ளது. ஆம் 125 சிசி பைக் தான். இந்தியாவில் 110 சிசி ஸ்டார் சிட்டி பைக் மட்டுமே விற்பனையில் இருக்கிறது. 125 சிசி இன்ஜின் கொண்ட ஸ்டார் சிட்டி பைக்கை வெளிநாடுகளில் மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்து வருகிறது.

110 சிசி ஸ்டார் சிட்டி பைக் இந்தியாவுடன் சேர்த்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த பைக்கை கடந்த நிதியாண்டில் 1.96 லட்சம் யூனிட்டுகள் வரை ஏற்றுமதி செய்துள்ளது டிவிஎஸ். ஒட்டுமொத்தமாக 9.16 லட்சம் ஸ்டார் சிட்டி பைக்குகளை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்காக ஏற்றுமதி செய்துள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

TVS Star City Plus

கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 51.80 லட்சம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதில் ஸ்டார் சிட்டி பைக்கின் அளவு மட்டும் 9.16 லட்சம் யூனிட்டுகள். இந்த விற்பனை அளவுடன் சுமார் 18 சதவீதம் ஏற்றுமதி சந்தை பங்குகளை ஸ்டார் சிட்டி பைக் கைப்பற்றியிருக்கிறது. அப்படியென்றால் வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பைக்குகளில் தோராயமாக ஐந்தில் ஒன்று ஸ்டார் சிட்டி என்று கூட கூறலாம்.

இதில் நாம் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், மேலே கூறியது போல கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஒரே ஒரு ஸ்டார் சிட்டி பைக் தான் விற்பனையாகியிருக்கிறது என்பது தான். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் வெறும் 5 ஸ்டார் சிட்டி பைக்குள் தான் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. அதற்கு முன்பாக பிப்ரவரி மாதம் வெறும் 3 யூனிட்டுகள் தான். ஜனவரி மாதம் தான் கொஞ்சம் அதிகமாக 40 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது.

இதில் இன்னொரு ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அதிகளவில் விற்பனையாவது மட்டுமின்றி, 2025ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2026ம் நிதியாண்டில் ஸ்டார் சிட்டி 125 பைக்கின் ஏற்றுமதி அளவு 41 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது என்பது தான். 2025ம் நிதியாண்டில் 5.09 லட்சம் பைக்குகளையே டிவிஎஸ் ஏற்றுமதி செய்திருக்கிறது, 2026ம் நிதியாண்டு ஸ்டார் சிட்டி 125 பைக்கின் ஏற்றுமதி அளவு 2.10 லட்சம் வரை கூடியிருக்கிறது. அது வெளிநாடுகளில் இந்த பைக்கிற்கு எவ்வளவு டிமாண்டு இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு பைக் இந்தியாவில் அதிகம் விற்பனையாகவில்லை என்றால் ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். அந்த இடத்தை, அதனை விட சிறப்பாக வேறு பைக்குகள் நிரப்பி வருகின்றன என்பது தான் அது. இந்தியாவில் ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக்குகள் டிவிஎஸ் ஸ்டார் சிட்டியின் இடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி வருகின்றன. இதனை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்.

Article Published On: Saturday, June 6, 2026, 19:43 [IST]
English summary
Tvs star city is the most exported bike in india in fy2026
மேலும்... #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out