83 கிமீ மைலேஜ் கொடுக்கும் பைக்.. ஆனா வாங்கத் தான் ஆளில்லை.. 1 பைக் மட்டும் தான் வித்துருக்கு!

இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்து வரும் பல்வேறு கம்யூட்டர் பைக்குகளில் ஒன்று ஸ்டார் சிட்டி பிளஸ். ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக 100 சிசி கம்யூட்டர் பைக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது டிவிஎஸ்ஸின் ஸ்டார் சிட்டி பிளஸ்.

இந்த பைக்கின் பிளஸ் பாயிண்ட்டே மைலேஜ் தான். லிட்டருக்கு சுமார் 83.09 கிமீ மைலேஜ் (ARAI) கொடுக்கும் திறனை இந்த பைக்கின் இன்ஜின் கொண்டிருக்கிறது. இவ்வளவு மைலேஜ் கொடுக்கக்கூடிய பைக் என்றால் விற்பனை அள்ளுமே என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை. கடந்த மாதம் இந்த பைக் விற்பனையானது ஒரே ஒரு யூனிட் மட்டுமே.

TVS Star City Plus

ஆம், கடந்த ஏப்ரல் மாதம் இந்த டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை ஒரே ஒருவர் மட்டுமே வாங்கியிருக்கிறார். பைக்குகள் குறைவாக விற்பனையாவது சகஜம் தான். ஆனால் மிகவும் குறைவாக ஒருவர் மட்டுமே வாங்கும் அளவிற்கு இதனை மோசமான பைக் என்று கூற முடியாது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இந்த பைக் இவ்வளவு குறைவான அளவு தான் விற்பனையாகி வருகிறது.

கடந்தாண்டு ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனை இவ்வளவு குறைவாக இல்லை. சுமார் 2,966 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது. ஒரே ஆண்டில் அந்த விற்பனை 99.97 சதவீதம் குறைந்து 1 யூனிட்டாக வந்து நிற்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் விற்பனை இவ்வளவு குறைவாகவே இருந்து வருகிறது.

TVS Star City Plus

ஏப்ரல் மாதம் 1 யூனிட் என்றால், அதற்கு முன்பு மார்ச் மாதம் வெறும் 5 யூனிட்டுகள் தான். அதற்கும் முன்பு பிப்ரவரியில் வெறும் 3 யூனிட்டுகள் மட்டுமே. ஜனவரி மாதம் மட்டுமே சற்று அதிகமாக 40 யூனிட்டுகள் வரை இந்த ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் விற்பனையாகியிருக்கிறது.

ஆனால் அதற்கு முந்தைய சில மாதங்களில் இவ்வளவு குறைவாக இல்லை. 2025ன் கடைசி மூன்று மாதங்களான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் முறையே 5,829 யூனிட்டுகள், 4,604 யூனிட்டுகள் மற்றும் 608 யூனிட்டுகள் வரை ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. திடீரென இந்த ஆறு மாதங்களிலேயே இந்த பைக்கின் விற்பனை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இவ்வளவு குறைவாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த கம்யூட்டர் பைக்கின் விற்பனையை டிவிஎஸ் நிறுத்தவிருக்கிறதா எனவும் வாடிக்கையாளர்கள் பலர் கேள்வியெழுப்பி வருவதைப் பார்க்க முடிகிறது. டிவிஎஸ்ஸே இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கையைக் குறைப்பதைப் போலத் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் விரைவில் அந்நிறுவனத்திடமிருந்தே அதிகார்பூர்வ அறிவிப்பு வரும்.

மேலே கூறியது போல இந்தியாவில் சிறப்பான மைலேஜ் கொடுக்கும் கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் இருந்து வருகிறது. டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியன்ட்களாக 72,500 ரூபாய் முதல் 75,200 ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டார் சிட்டி பிளஸைத் தவிர்த்து, ஸ்போர்ட் மற்றும் ரேடியான் உள்ளிட்ட கம்யூட்டர் பைக்குகளையும் டிவிஎஸ் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நன்றாக விற்பனையாகி வந்த பட்ஜெட் பைக் ஒன்று திடீரென விற்பனை குறைந்திருப்பது அபூர்வமாகத் தான் இருக்கிறது. விரைவில் இது தொடர்பான காரணம் நமக்குத் தெரிய வரும். எனினும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பான கம்யூட்டர் பைக் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதனை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்போதும் விற்பனை செய்யப்பட்டே வருகிறது.

Article Published On: Friday, May 22, 2026, 19:50 [IST]
English summary
Tvs star city plus commuter bike sales reduced to just one unit this april what is the reason
மேலும்... #tvs #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+