இந்த டிவிஎஸ் பைக்கை வெறும் 5 பேர்தான் வாங்கியிருக்காங்க! நம்ம அப்பாலாம் ஓட்டிய வண்டி நம்மை விட்டு பிரிய போகுது

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் (TVS Star City Plus). இதன் விற்பனை தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது.

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 2,855 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 5 ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,850 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

TVS Star City Plus Side Design

இது 99.82 சதவீத வீழ்ச்சி ஆகும். இது மிகவும் கடுமையான வீழ்ச்சி என்பதுடன், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம், வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த டிவிஎஸ் நிறுவனத்தின் ஒரே டூவீலர் என்ற மோசமான பெயரையும், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பெற்றுள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்தியாவில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஏனெனில் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 3 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

TVS Star City Plus

அதன் பின் வந்த மார்ச் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 5 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த மார்ச் மாதத்தில் 2 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

இதன் மூலம் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் 66.67 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் இது மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. டிவிஎஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஸ்டார் சிட்டி ப்ளஸ் இன்னமும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள், தங்களிடம் கைவசம் உள்ள டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்குகளை மட்டும் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் விற்பனை எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் ஒரு சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. குறைவான விலை, அதிக மைலேஜ் போன்றவைதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக இருந்தன. ஆனால் நாளடைவில் புதிய மாடல்களின் வருகை போன்ற காரணங்களால், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் அதன் பிரபலத்தை இழந்து விட்டது.

டிவிஎஸ் நிறுவனம் முன்பு ஸ்டார் சிட்டி பைக்கை விற்பனை செய்து வந்தது. தற்போது விற்பனையில் உள்ள ஸ்டார் சிட்டி ப்ளஸ், அதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தற்போது வரை ஒட்டுமொத்தமாக 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் ஸ்டார் வரிசை பைக்குகளை வாங்கியுள்ளனர்.

இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமாக இருந்த பைக் என்பதற்கு இந்த எண்கள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. தற்போது விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில், 110 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 71,600 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு காலத்தில் இந்திய சாலைகளை டிவிஎஸ் ஸ்டார் வரிசை பைக்குகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது அவற்றை சாலைகளில் பார்ப்பது என்பதே மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. அதன் விற்பனை எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படலாம் என்பதான் அறிகுறிதான் இது.

Article Published On: Saturday, April 25, 2026, 17:24 [IST]
English summary
Tvs star city plus sales report march 2026 just 5 units sold
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+