மாருதி, ஹோண்டாவை போல் அதிரடி முடிவை எடுத்த டிவிஎஸ்! வாடிக்கையாளர்களை வளச்சு போட சூப்பரான திட்டம்!

இந்தியாவில் ஒரு சில வாகன நிறுவனங்கள் தனித்தனி ஷோரூம்கள் மூலம் தங்கள் வாகனங்களை விற்பனை செய்கின்றன. உதாரணத்திற்கு மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம். இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி 2 வகையான ஷோரூம்கள் மூலம் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அவை மாருதி சுஸுகி அரேனா (Maruti Suzuki Arena) மற்றும் மாருதி சுஸுகி நெக்ஸா (Maruti Suzuki Nexa) ஆகியவை ஆகும். மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) போன்ற கார்கள், மாருதி சுஸுகி அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

TVS Logo

மறுபக்கம் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்கள், மாருதி சுஸுகி நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விலை உயர்ந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குவதற்காக தனித்தனி ஷோரூம்கள் செயல்பட்டு கொண்டுள்ளன.

டூவீலர் நிறுவனங்களை பொறுத்தவரையில், ஹோண்டா (Honda) இதே யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் ரெட்விங் (RedWing) மற்றும் பிக்விங் (BigWing) என்ற பெயர்களில் இயங்கி வரும் தனித்தனி ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் டிவிஎஸ் (TVS) நிறுவனமும் தற்போது இதே யுக்தியயை கையில் எடுத்துள்ளது.

TVS Jupiter

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் தற்போது 'படோக்' (TVS Paddock) என்ற புதிய டீலர்ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. விலை உயர்ந்த பிரீமியம் பைக்குகளை விற்பனை செய்வதற்காக 'படோக்' டீலர்ஷிப்களை டிவிஎஸ் நிறுவனம் திறக்கவுள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டின் 2வது காலாண்டில், அதாவது வரும் ஜூலை-செப்டம்பர் கால கட்டத்தில் முதல் படோக் டீலர்ஷிப் திறக்கப்படவுள்ளது.

இந்த 'படோக்' டீலர்ஷிப்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வாங்குதல் அனுபவம் கிடைக்கும். அத்துடன் 'ஓனர்ஷிப்' அனுபவமும் சிறப்பாக இருக்கும் என டிவிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 'செக்லேண்ட் கிண்ட்லிசைடுஸ்' (Checkland Kindleysides) நிறுவனம் இந்த 'படோக்' டீலர்ஷிப்பை டிசைன் செய்து கொடுத்துள்ளது. இது மிகவும் பிரபலமான டிசைன் ஏஜென்ஸி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 5,66,585 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 4,31,275 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'படோக்' ஷோரூம்கள் திறப்பு இதற்கு ஒரு உதாரணம் ஆகும். இது போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலமாகவே டிவிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணம் செய்து வருகிறது என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Sunday, June 7, 2026, 15:37 [IST]
English summary
Tvs to open paddock premium showrooms in india soon for highend bikes
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out