தமிழ்நாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை இந்த மாநிலம் தட்டி தூக்க போகுதா! பெரிய முதலீடு ஆச்சே!

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் (TVS). தற்போதைய நிலையில் இந்தியாவில் 3 இடங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டின் ஓசூர், கர்நாடகாவின் மைசூர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நலகர் ஆகிய பகுதிகளில் அவை இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகள் அனைத்திலும் சேர்த்து தற்போதைய நிலையில் ஒரு வருடத்திற்கு 68 லட்சம் வாகனங்களை தயாரிக்க முடியும். ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் தனது வருடாந்திர உற்பத்தி திறனை 83 லட்சம் வாகனங்களாக உயர்த்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு வருடத்திற்கு 15 லட்சம் வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்ய டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

TVS Logo

இதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை அமைப்பது குறித்து டிவிஎஸ் பரிசீலனை செய்து வருகிறது. இந்த தொழிற்சாலை தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம் அல்லது குஜராத் ஆகிய ஏதேனும் ஒரு மாநிலத்தில் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டிவிஎஸ் தனது புதிய தொழிற்சாலையை இந்த மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் தற்போதைய நிலையில் 12 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

அவை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎஸ், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, டிவிஎஸ் ரோனின், டிவிஎஸ் ரைடர், டிவிஎஸ் ரேடியான், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் ஆகியவை ஆகும்.

TVS Jupiter

அத்துடன் டிவிஎஸ் நிறுவனம் 5 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை டிவிஎஸ் என்டார்க் 150, டிவிஎஸ் என்டார்க் 125, டிவிஎஸ் ஜூபிடர், டிவிஎஸ் ஜூபிடர் 125 மற்றும் டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆகியவை ஆகும். இவை எல்லாம் ஐசி இன்ஜின் ஸ்கூட்டர்கள் ஆகும். இவற்றுடன் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

அவை டிவிஎஸ் ஐக்யூப், டிவிஎஸ் எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஆர்பிடர் ஆகியவை ஆகும். இது மட்டுமல்லாது ஒரே ஒரு மொபட்டையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஆகும். இவை எல்லாம் தவிர மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் 6 தயாரிப்புகளையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

அவை டிவிஎஸ் கிங் டீலக்ஸ், டிவிஎஸ் கிங் ட்யூராமேக்ஸ் ப்ளஸ், டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ், டிவிஎஸ் கிங் கார்கோ ஹெச்டி இவி, டிவிஎஸ் கிங் கார்கே மற்றும் டிவிஎஸ் கிங் கார்கோ சிஎன்ஜி ஹெச்டி ஆகியவை ஆகும். இந்த வாகனங்களுக்கு எல்லாம் நல்ல 'டிமாண்ட்' இருந்து வருவதால்தான், டிவிஎஸ் நிறுவனம் தனது உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் டூவீலர் உற்பத்தி செய்ய கூடியது என்பதால், இது பெரிய முதலீடாக இருக்கும். டிவிஎஸ் நிறுவனம் ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Article Published On: Monday, May 18, 2026, 17:42 [IST]
English summary
Tvs to setup new factory in this state to increase production
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+