வெறும் 49,999 ரூபாய்க்கு டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனையில் வெளுத்து வாங்கப் போகுது!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிங் என்றால் அது டிவிஎஸ் தான். கடந்த மாதம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனமே விற்பனை செய்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நல்ல வளர்ச்சி விகிதத்தையும் டிவிஎஸ் கொண்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அதிகமாக 47,064 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டிவிஎஸ். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும் 45,000 யூனிட்டுகளுக்கு மேலான அளவிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையைப் பதிவு செய்து வருகிறது டிவிஎஸ். அதனை ஜூன் மாதமும் தொடர்ந்திருக்கிறது.

TVS iQube

கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இது 76 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மொத்தமாக 26,734 யூனிட்டுகள் என்ற அளவிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அப்போதும் டிவிஎஸ்ஸே அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கடந்த ஜூன் மாதம் 45,000 யூனிட்டுகளுக்கு மேலான விற்பனையுடன், இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 24.29 சதவீதம் சந்தைப் பங்குகளையும் டிவிஎஸ் கைப்பற்றியுள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் தற்போது விற்பனையும் நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஸ்கூட்டராக உள்ளது.

TVS Orbiter

இந்தியாவில் தற்போது இரண்டு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். ஒன்று ஐக்யூப் (iQube), மற்றொன்று ஆர்பிட்டர் (Orbiter). ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக விற்பனையில் இருப்பதால் இதுவே டிவிஎஸ்ஸின் நம்பிக்கையைப் பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் உள்ளது. ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்தாண்டு தான் இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம்.

ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வேரியன்ட்கள் மாற்றப்பட்டு, சேர்க்கப்பட்டு, புதிய வசதிகள் கொடுக்கப்பட்டு தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் மற்றும் நம்பகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது ஐந்து விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன், ஐந்து வேரியன்ட்களாக டிவிஎஸ் விற்பனை செய்து வருகிறது.

இந்த ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 1.02 லட்சம் ரூபாயில் தொடங்கி 1.73 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. BaaS எனப்படும் வாடகை பேட்டரி திட்டத்தின் கீழ் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 60,000 ரூபாய் என்ற குறைவான தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே நம்மால் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ்ஸின் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆர்பிட்டர். இது தான் அதன் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. V1 மற்றும் V1 என இரண்டு வேரியன்ட்களாக இந்த ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 95,550 ரூபாய் மற்றும் 1.13 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். BaaS திட்டத்தின் கீழ் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 50,000 ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால் கண்களை மூடிக் கொண்டு இந்த டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றை வாங்கிவிடலாம். 95,000 ரூபாய் முதல் 1.73 லட்சம் ரூபாய் வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற ஒரு வேரியன்ட் கண்டிப்பாக விற்பனையில் இருக்கிறது எனக் கூறலாம். வரும் மாதங்களில் இதன் விற்பனை மேலும் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, July 9, 2026, 17:17 [IST]
English summary
Tvs tops electric scooter sales chart yet again in june 2026 with iqube and orbiter
மேலும்... #tvs motor #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out