அப்பாச்சி பைக்கை அப்டேட் செய்த டிவிஎஸ்.. இப்போ நிறைய வசதிகள்.. ரொம்ப குறைவான விலையில்!

இந்தியாவில் இளைஞர்களுக்குப் பிடித்தமான பைக்குகளில் ஒன்றாக இருக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கினை அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ். புதிதாக எந்த அம்சமும் சேர்க்கப்படவில்லை, ஆனால் வேரின்ட்களுக்கிடையில் வசதிகளில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. முன்னர் டாப் எண்டு வேரியன்ட் மட்டுமே அனைத்து வசதிகளையும் கொண்டிருந்த நிலையில், தற்போது கீழ்நிலை வேரியன்ட்களிலும் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

இனி இந்த பைக்கை மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யவுள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ். சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் வித் USD மற்றும் USD வித் TFT என மூன்று வேரியன்ட்களாக மட்டுமே இந்த 160 சிசி பைக் இனி விற்பனை செய்யப்படவுள்ளது. வேரியன்ட் வாரியாக என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

TVS Apache RTR 160 4V White

மூன்று வேரியன்ட்களிலுமே கிளாஸ்-D ப்ரொஜெக்டார் முகப்பு விளக்கு, LED DRL-கள், LED விளக்குகள், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய வசதிகளை ஸ்டாண்டர்டாக வழங்கியிருக்கிறது டிவிஎஸ். இவற்றுடன் அடிப்படையான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியன்டில், பெயருக்கேற்றது போல சிங்கிள் சேனல் ஏபிஎஸ், LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை வேரியன்டை ரூ.1.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.

அடுத்ததாக இருக்கும் இடைநிலை வேரியன்டான டூயல் சேனல் ஏபிஎஸ் வித் USD-யில், பெயரில் உள்ளது போலவே டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க் (USD) சஸ்பென்ஷன் செட்டப் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடிப்படை வேரியன்டைப் போலவே இதிலும் LCD டிஸ்பிளே தான், ஆனால் லீவர்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியையும் இந்த வேரியன்டில் கூடுதலாகக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். இந்த வேரியன்டை ரூ.1.31 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம்.

TVS Apache RTR 160 4V Red

இறுதியாக டாப் எண்டான USD வித் TFT வேரியன்ட். இந்த வேரியன்டிலும் பெயரில் உள்ளது போலவே அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனுடன், LCD டிஸ்பிளேவுக்கு மாற்றாக 5 இன்ச் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இடைநிலை வேரியன்டைப் போலவே அட்ஜஸ்டபிள் லீவர்கள் வசதியும், ட்ராக்ஷன் கண்ட்ரோல் அம்சத்தையும் இந்த டாப் எண்டு வேரியன்டில் டிவிஎஸ் கொடுத்துள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த வேரியன்டானது ரூ.1.37 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இவற்றைத் தவிர மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. மெக்கானிகலாக அதே 159.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் புதிய பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன, ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின். ஸ்போர்ட் மோடில் இந்த இன்ஜினானது 17.6 hp பவர் மற்றும் 14.73 Nm டார்க்கையும், அர்பன் மற்றும் ரெயின் மோடுகளில் 15.6 hp பவர் மற்றும் 14.1 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

மேற்கூறிய இன்ஜினானது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய அப்பாச்சி பைக் மாடலை, மேட் பிளாக், ரேஸிங் ரெட், கிரானைட் கிரே, பியர்ல் ஒயிட், மரைன் ப்ளூ ஆகிய நிறத் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அப்டேட்டுடன் ஃப்ரஷ்ஷாகியிருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக். தற்போது அடிப்படை வேரியன்டில் இருந்தே போதுமான வசதிகள் கொண்ட பைக்காகியிருக்கிறது. ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் அட்ஜஸ்டபிள் லீவர் ஆகிய வசதிகள் இந்த அப்பாச்சியை மேலும் ப்ரீமியமான ஒரு பைக்காக மாற்றுகின்றன. புதிய அப்டேட்டோடு விலையில் டிவிஎஸ் பெரிய அளவில் மாற்றாதது, இந்த அப்டேட்டை வரவேற்கத்தக்க ஒன்றாக மாற்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 10:02 [IST]
English summary
Tvs updated apache rtr 160 4v with functional updates check all details here
மேலும்... #tvs #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+