வயசானவங்க கூட ஈஸியா ஓட்டலாம்... வெறும் 44 ஆயிரத்துக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மொபட்களில் ஒன்று டிவிஎஸ் எக்ஸ்எல் 100 (TVS XL 100). டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 46,192 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 35,181 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 11,011 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 31 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் எக்ஸ் 100 மொபட்டின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 44,350 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 61,560 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டில் 99.7 சிசி 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4.4 பிஎஸ் பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 55-65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர்.

இது சிறப்பான மைலேஜ் என்பதுடன், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் எடை குறைவானதாகவும் உள்ளது. இதன் எடை வெறும் 89 கிலோ மட்டுமே. எனவே டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டை வயது முதிர்ந்தவர்கள் என்றாலும் கூட, மிகவும் எளிமையாக இயக்க முடியும். இதன் காரணமாக கிராமப்புறங்களிலும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைவானது மற்றும் பராமரிப்பதற்கு மிகவும் எளிமையானது ஆகிய காரணங்களால்தான், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக அதிக பொருட்களை வைத்து கொண்டு செல்லும் வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும், வியாபாரிகள் மத்தியிலும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு இதுவே முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
முன்னதாக டிவிஎஸ் நிறுவனம் டிவிஎஸ் இ எக்ஸ்எல் (TVS E XL) மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல் இவி (TVS XL EV) என்ற 2 பெயர்களை காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளது. டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற யூகங்களை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரப்போகிறதா? என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனினும் டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), இந்திய சந்தையில் மிகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டால், அதுவும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடைசி 3 பத்திகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications