இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான ஸ்கூட்டர் இது தான்.. அவ்வளவு கம்மி விலை!
இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஒரு ஸ்கூட்டர், ஆனால் அதிகம் பேர் ஏறெடுத்தும் பார்க்காத ஒரு ஸ்கூட்டர் என்றால் அது டிவிஎஸ்ஸின் செஸ்ட் (TVS Zest 110) தான். தற்போது இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்து வரும் ஐந்து ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது செஸ்ட். அதேபோல், டிவிஎஸ் விற்பனை செய்து வரும் இரண்டே இரண்டு 110 சிசி ஸ்கூட்டர்களில் செஸ்டும் ஒன்று.
இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான ஸ்கூட்டர் என்றால் அது இந்த செஸ்ட் 110 தான். 2014ம் ஆண்டிலிருந்து இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டிவிஎஸ்ஸின் பிரபலமான ஸ்கூட்டி பெப் அனைவருக்கும் தெரியும். அது வேண்டாம், ஆனால் அதனைப் போலவே அதற்கு மாற்றாக வேறு ஸ்கூட்டர் வேண்டும் என்று சொல்லும் வாடிக்கையாளர்களுக்காகவே செஸ்ட் 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்.

தற்போது மூன்று வேரியன்ட்களாக இந்த 110 சிசி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். கிளாஸ், மேட் மற்றும் SXC என மூன்று வேரியன்ட்களாக இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கிளாஸ் (Gloss) தான் இருப்பதிலேயே விலை குறைவான வேரியன்ட். 65,650 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த வேரியன்டை நாம் வாங்கலாம்.
தொடர்ந்து மேட் (Matte) வேரியன்டானது 69,850 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப்-எண்டான SXC வேரியன்டானது 73,140 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலைகள் அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கிளாஸ் மற்றும் மேட் வேரியன்ட்கள் முன்பிருந்தே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், SXC வேரியன்டை கடந்தாண்டு தான் செஸ்ட் 110 லைன்-அப்பில் அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்.

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்து கொள்ளும் வசதி ஆகிய மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன், தனித்துவமான புதிய நிறங்களையும் கொண்டு இந்த டாப் எண்டு SXC வேரியன்ட் வெளியிடப்பட்டது. காஸ்மெடிக் ரீதியாகவும் இந்தப் புதிய வேரியன்ட் மற்ற வேரியன்ட்களில் இருந்து தனித்துத் தெரிந்தது.
விலை கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை என்னும் வாடிக்கையாளர்களுக்காக இந்த டாப் எண்டு வேரியன்டை வெளியிட்டது டிவிஎஸ். இந்த ஸ்கூட்டரில் 7.7 hp பவர் மற்றும் 8.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 109.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தினசரி பயன்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நல்ல ஸ்கூட்டர் வேண்டும் என்று கேட்கும் வாடிக்கையாளர்கள் இந்த டிவிஎஸ் செஸ்ட் 110 ஸ்கூட்டரை தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். டிவிஎஸ்ஸின் ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டரை விட 13,000 ரூபாய் வரை குறைவான தொடக்க விலையை இந்த செஸ்ட் 110 ஸ்கூட்டர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான விற்பனை தான் என்றாலும் இந்தியாவில் தனக்கென கணிசமான அளவிலான வாடிக்கையாளர் வட்டத்தைக் கொண்டுள்ளது செஸ்ட் 110 ஸ்கூட்டர். கடந்த ஏப்ரல் மாதம் 8,822 செஸ்ட் 110 ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டிவிஎஸ். இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் வரை விற்பனை உயர்வாகும். டிவிஎஸ்ஸின் குறைவாக விற்பனையாகும் வாகனங்களின் பட்டியலில் கீழிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்த செஸ்ட் 110 ஸ்கூட்டர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல மிகவும் குறைவான விலையில் ஒரு ஸ்கூட்டர் வேண்டும், அடிப்படைான ஸ்கூட்டராக இருந்தாலும் போதும் என்பவர்கள் இந்த செஸ்ட் 110 ஸ்கூட்டரை பரிசீலிக்கலாம். கொஞ்சம் ப்ரீமியமாக வேண்டும் என்றால் ஜூப்பிட்டர் 110 இருக்கிறது. பவரும் கூடுதலாக வேண்டும் என்றால் ஜூப்பிட்டர் 125, இன்னும் கொஞ்சம் ஸ்போர்ட்டியாக வேண்டும் என்றால், என்டார்க் 125, அதன் பவர் போதவில்லை என்றால் என்டார்க் 150. அவ்வளவு தான்.


Click it and Unblock the Notifications