எந்தவொரு சத்தமும் இல்லாம எல்லா ஊரிலும் ஷோரூம் திறந்துட்டு வரும் அல்ட்ராவயலட்!
வடகிழக்கு இந்தியாவின் கரடுமுரடான மலைப்பாதைகளில் ஒரு புதிய எலெக்ட்ரிக் பைக் புரட்சி அரங்கேறப் போகிறது. இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனமான அல்ட்ராவயலட் (Ultraviolette), வடகிழக்கு இந்தியாவில் தனது முதல் 'யுவி ஸ்பேஸ் ஸ்டேஷன்' (UV Space Station) என்கிற எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டரை மிசோரம் மாநிலத்தில் திறந்து, பைக் பிரியர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சவாலான சாலைகளும், துடிப்பான இளைய தலைமுறை ரைடர்களும் நிறைந்த வடகிழக்கு இந்திய பிராந்தியத்திற்குள் அல்ட்ராவயலட் காலடி எடுத்து வைத்திருப்பது, அங்குள்ள மோட்டார்சைக்கிள் கலாச்சாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது. மேலும், ரூ.30,000 வரையிலான வியப்பூட்டும் சலுகைகளையும் அல்ட்ராவயலட் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல் செலவில் இருந்து முற்றிலும் விடுபட விரும்புகிறீர்களா? அல்ட்ராவயலட் வழங்கும் 'கில் தி பெட்ரோல் பில்' (Kill the Petrol Bill) திட்டத்தின் கீழ், ரூ.30,000 வரை அசத்தலான சலுகைகளைப் பெறக்கூடிய அரிய வாய்ப்பு இப்போது வடகிழக்கு இந்திய பிராந்தியத்திலும் காத்திருக்கிறது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்குகளை அங்கு டெஸ்ட் ரைடு செய்யவும், வாங்கவும் முடியும்.
மேலும், பைக்கிற்கான பராமரிப்புச் சேவைகளைப் பெறவும் மற்றும் பிரத்யேக பைக் உபகரணங்களை (Accessories and Merchandise) நேரடியாக வாங்கவும் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் இந்த புதிய எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர் ஒரு சிறந்த தளமாக அமையப்போகிறது. இந்த அதிநவீன அல்ட்ராவயலட் மையம் ஆனது MSS மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மிசோரம் மாநிலத்தின் ஐசாவல் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

ஐசாவல் நகரின் ராம்ஹ்லுன் நார்த், சாங்கேனா பெட்ரோல் பங்க் அருகில் (D/15, தரைத்தளம்) மிகவும் பிரம்மாண்டமாக இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. மிசோரமின் பைக் பிரியர்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பைக் ரைடர்களும் நேரடியாக வந்து அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் ஆற்றலை அனுபவித்து மகிழலாம்.
ஐசாவல் மையத்தில் அல்ட்ராவயலட்டின் எக்ஸ்-47 கிராஸ்ஓவர் (X-47 Crossover) மற்றும் எஃப்77 (F77) எலெக்ட்ரிக் பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த எலெக்ட்ரிக் பைக்குகளில் உள்ளது என்றால், வெறும் 2.8 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிப்பிடிக்கும் அசாத்திய செயல்திறன் கொண்டவையாக இவை விளங்குகின்றன.
40.2 எச்பி பவர் மற்றும் 100 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வாரி வழங்கும் இந்த பைக்குகளின் ஆற்றல் எப்பேர்ப்பட்ட கடினமான மலைப்பாதைகளையும் எளிதாக வெல்லக்கூடியது. இவற்றின் பேட்டரி திறனைப் பற்றிக் கேட்டால் இன்னும் வியந்து போவீர்கள். இவற்றில் பொருத்தப்படும் 10.3kWh பேட்டரி பேக், ஒரே ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் போதும், 323 கிமீ (IDC Range) தூரம் வரை பைக்கில் உங்களை எவ்வித தடையுமின்றி அழைத்துச் செல்லும்.
அல்ட்ராவயலட் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக டெஸ்ஸராக்ட் என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், ஷாக்வேவ் என்கிற எலெக்ட்ரிக் பைக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கடந்த 2025 பிப்ரவரி மாதத்திலேயே இவை அறிமுகம் செய்யப்பட்டு, ஆரம்ப விலைகள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகள் துவங்கப்பட்டாலும், இன்னமும் இந்த இரு புதிய அல்ட்ராவயலட் வாகனங்கள் மக்களின் கைகளை வந்தடையவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் கவனம் எழுந்துள்ளது. அந்த தைரியத்தில்தான் அல்ட்ராவயலட் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளிலும் தனது எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. இத்தகைய அதிநவீன அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்குகள் வடகிழக்கு மக்களின் பயண அனுபவத்தை எப்படி மாற்றியமைக்கப் போகின்றன என்பதைப் பார்க்க நீங்கள் தயாரா?
சில படங்கள் நீக்கப்பட்டு, புதிய படங்கள் சேர்க்கப்பட்டன.


Click it and Unblock the Notifications