பைக்கின் விலையை இதைவிட கம்மி பண்ண முடியாது... ஸ்டார்ட்-அப் பைக் கம்பெனியின் அதிரடி முடிவு!
அல்ட்ராவயலட் நிறுவனம் அதன் எஃப்77 கிராஸ்ஓவர் எலெக்ட்ரிக் பைக்கில் புதியதாக விலை குறைவான வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.2.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வேரியண்ட் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக் உடன் ஒப்பிடுகையில் எந்த அளவிற்கு வேறுப்பட்டது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அல்ட்ராவயலட் மார்க்கெட்டில் தன்னை விலையுயர்ந்த எலெக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. விலைமிக்கவை ஆக இருப்பினும், அல்ட்ராவயலட் எஃப்77 மற்றும் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இருப்பினும், இதில் எக்ஸ்47 பைக்கை மேலும் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக புதிய விலை குறைவான வேரியண்ட் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ரூ.2.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட் ஆனது எக்ஸ்47 பைக்கின் விலையை காட்டிலும் ரூ.15,000 விலை குறைவானது ஆகும்.
இதற்கேற்ப எக்ஸ்47 பைக்கின் மற்ற வேரியண்ட்களில் கிடைக்கும் ஹைசென்ஸ் ரேடார் டெக்னாலஜி இந்த புதிய வேரியண்ட்டில் கிடைக்காது. அல்ட்ராவயலட் நிறுவனத்தின் அதிநவீன ஜென்ரேஷன் 6 ரேடார் தொழிற்நுட்பமான இது இந்தியாவில் எந்தவொரு 2-வீலரிலும் பொருத்தப்படும் ரேடார் தொழிற்நுட்பத்தை காட்டிலும் அட்வான்ஸானது ஆகும். இத்தகைய டெக்னாலஜி இல்லாமல் குறைந்த விலையில் எக்ஸ்47 பைக்கை வாங்க விரும்புபவர்களுக்காக புதிய வேரியண்ட்டை அல்ட்ராவயலட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ரேடார் தொழிற்நுட்பத்தின் மூலமாக ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, ஓவர்டேக் அலார்ட்ஸ், வாகனத்தின் பின்பக்கத்தில் மோதல் ஏற்பட போவதை எச்சரிக்கும் வசதி மற்றும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை எக்ஸ்47 பைக்கில் பெற முடிகிறது. இத்தகைய ஹைசென்ஸ் ரேடார் டெக்னாலஜி வழங்கப்படாவிடினும், மற்ற பிரீமியம் தரத்திலான வசதிகள் மற்றும் அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக்ஸை புதிய வேரியண்ட்டில் பெறலாம்.
இதன்படி முக்கியமாக, க்ளைட், காம்பாட் மற்றும் பாலிஸ்டிக் என்கிற மூன்று ரைடிங் மோட்களை பெறலாம். இது இல்லாமல், மூன்று நிலைகளில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், டிராக்ஷன் கண்ட்ரோல், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட் மற்றும் டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவற்றை புதிய வேரியண்ட்டிலும் பெறலாம்.
இவற்றுடன் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயலட் ஏஐ சப்போர்ட், டீப் ஸ்லிப் மோட் மற்றும் டாஷ்கேமராவை பொருத்துவதற்கான ஹேங்கர் உள்ளிட்டவையும் கிடைக்கும். இதேபோல், பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவையும் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கில் வழக்கமான வழங்கப்படுவதுதான் புதிய விலை குறைவான வேரியண்ட்டிலும் கிடைக்கும்.
7.1kWh திறன் கொண்ட பேட்டரி எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகப்பட்சமாக 36.2 எச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை இந்த பைக்கில் பெறலாம். 0-இல் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 145கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், குறைவான விலையில் எக்ஸ்47 பைக்கை வாங்க விரும்புபவர்களுக்காக இந்த புதிய வேரியண்ட் களமிறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அல்ட்ராவயலட்டின் ஹைசென்ஸ் ரேடார் டெக்னாலஜி இல்லாதது இந்த புதிய வேரியண்ட்டை எந்த அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் கொண்டுப் போய் சேர்க்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications