ஓலா ஸ்கூட்டருக்கு போட்டியா உருவாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆயிரக்கணக்கான மக்கள் புக்கிங் போட்டுட்டு வெயிட்டிங்

அல்ட்ராவயலட் நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டெசராக்ட் ஆகும். கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட டெசராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையும் அப்போதே அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் கூட அப்போது துவங்கப்பட்டன. இருப்பினும், டெசராக்ட் இன்னும் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை.

வெளியீடு செய்யப்பட்டு 15 மாதங்களாகி விட்ட நிலையில், டெசராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் துவங்கப்படும் என முன்னதாக அல்ட்ராவயலட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. புக் செய்துவிட்டு டெலிவிரிக்கு 1 வருடம் காத்திருக்க வேண்டுமா என சில வாடிக்கையாளர்கள் குமுறியப்படி ஸ்கூட்டரை புக்கிங் போட்டனர்.

ultraviolette tesseract electric scooter launch again postpone

அத்தகைய வாடிக்கையாளர்களை இப்போது நினைத்தால் பாவமாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் டெசராக்ட்டின் டெலிவிரிகள் துவங்கப்படாத நிலையில், 2026ஆம் ஆண்டின் மத்தியில் நிச்சயமாக துவங்கப்பட்டு விடும் இந்த மே மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி அல்ட்ராவயலட் டெசராக்ட் ஸ்கூட்டரின் அறிமுகம் பெரிதும் தள்ளிப் போகிறது.

எந்த அளவிற்கு தள்ளிப் போகிறது என்றால், இந்த 2026ஆம் வருடத்தில் இந்த புதிய அல்ட்ராவயலட் ஸ்கூட்டரின் அறிமுகத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியிருந்தாலும், 2027ஆம் ஆண்டு துவங்கிய பின்பே அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2027இன் முதல் 3 மாதங்களுக்கு டெசராக்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ultraviolette tesseract electric scooter launch again postpone

அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதில் சில தொழிற்நுட்ப சவால்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், முன்னதாக அல்ட்ராவயலட் எஃப்77 மற்றும் எக்ஸ்-47 எலெக்ட்ரிக் பைக்குகளின் அதே பிளாட்ஃபாரத்தில் புதிய டெசராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைக்க அல்ட்ராவயலட் நிறுவனம் திட்டமிட்டது.

ஆனால், எஃப்77 மற்றும் எக்ஸ்-47 போன்ற சூப்பர் பைக்குகளை உருவாக்க பயன்படுத்திய பிளாட்ஃபாரத்தை கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவது சிரமம் என்பதை பின்னர் அல்ட்ராவயலட் நிறுவனம் உணர்ந்துள்ளது. எஃப்77, எக்ஸ்-47 எலெக்ட்ரிக் பைக்குகளின் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்துவதால், டெசராக்ட் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 30 லிட்டர் கொள்ளளவிற்கு பெரிய ஸ்டோரேஜ் பகுதியை வழங்க முடியாத கட்டாயத்திற்கு அல்ட்ராவயலட் தள்ளப்பட்டது.

பெரிய அண்டர்-சீட் ஸ்டோரேஜை பார்த்துதான் நிறைய பேர் டெசராக்ட்டை புக் செய்தார்கள் என்பதால் 30 லிட்டர் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதியை வழங்கினால், 15 கிலோவாட்ஸ் திறனில் எலெக்ட்ரிக் மோட்டாரை இந்த ஸ்கூட்டருக்கு அல்ட்ராவயலட் வழங்க முடியாது. எலெக்ட்ரிக் மோட்டாரை 10 கிலோவாட்ஸ் திறனில் மட்டுமே வழங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெசராக்ட் ஸ்கூட்டரின் ஸ்டோரேஜை குறைப்பதா அல்லது எலெக்ட்ரிக் மோட்டாரின் திறனை குறைப்பதா என்கிற யோசனையில், எதையும் குறைக்காமல் ஸ்கூட்டருக்கான சேசிஸை மீண்டும் முதலில் இருந்து வடிவமைக்க அல்ட்ராவயலட் நிறுவனம் துவங்கியுள்ளது. இதுதான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தாமதப்படுவதற்கு காரணமாகும். அல்ட்ராவயலட் நிறுவனத்தின் இந்த முடிவு மாற்றத்தால், ஸ்கூட்டருக்கான மோட்டார் கண்ட்ரோலர், BMS, வைகல் கண்ட்ரோல் யூனிட் என முக்கியமானவை எல்லாம் மீண்டும் ஸ்க்ராட்ச்சில் இருந்து உருவாக்கப்பட உள்ளன.

அல்ட்ராவயலட் நிறுவனத்தின் எஃப்77 மற்றும் எக்ஸ்-47 எலெக்ட்ரிக் பைக்குகள் 50 வோல்ட்ஸ்-க்கும் குறைவான கட்டமைப்பில் உருவாக்கப்படும் நிலையில், புதிய டெசராக்ட் ஆனது அதி மின்னழுத்தம் கொண்ட கட்டமைப்பில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலமாக, அதிக ஸ்டோரேஜ் இடவசதிகளுடன் ஸ்கூட்டரை அளவில் சிறியதாகவும், தொடர்ச்சியாக அதிக பவரை வெளிப்படுத்தக் கூடியதாகவும் உருவாக்க முடியும்.

Article Published On: Wednesday, May 27, 2026, 21:37 [IST]
English summary
Ultraviolette tesseract electric scooter launch again postpone will arrive by q1 2027
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out