ஆவலுடன் எதிர்பார்க்கும் அல்ட்ராவயலெட் டெஸராக்ட் ஸ்கூட்டர் ஒருவழியாக சந்தைக்கு வருகிறது!!

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவயலெட் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் புதுமையான தொழில்நுட்பங்களுடன் கவனம் ஈர்த்து வருகிறது. செயல்திறன் மிக்க மின்சார பைக் மாடல்களை களமிறக்கி வரும் அல்ட்ராவயலெட் அடுத்து டெஸராக்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வர இருக்கும் டெஸராக்ட் ஸ்கூட்டரானது 261 கிமீ வரை ரேஞ்ச், மணிக்கு 125 கி.மீ வேகம் வரை திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் புக்கிங் செய்து காத்திருக்கின்றனர்.

முதலில் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட டெஸராக்ட் ஸ்கூட்டர், தற்போது 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்தான் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படும் நிலையில், ஸ்கூட்டரின் இறுதி விலை மற்றும் டெலிவரி குறித்த அறிவிப்புகளுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

Ultraviolette Tessaract

தாமதம் ஏன்?

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டெஸராக்ட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதுடன் புக்கிங்கும் ஏற்கப்பட்டது. சூப்பரான டிசைனில், அதிசெயல்திறன் மிக்கதாக இருந்தது. மேலும், 2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் டெலிவரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கால அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், தற்போது 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கு அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாமதத்துக்கு முக்கியக் காரணம், ஸ்கூட்டரின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட வடிவமைப்புச் சிக்கல்கள்தான் என்று கூறப்படுகிறது. முதலில் எஃப்77 (F77) மின்சார மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஸ்கூட்டரின் உட்புற இடவசதி மற்றும் வெப்ப மேலாண்மை தொடர்பான சவால்களால் புதிய மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Also Read

இதற்காக நிறுவனம் புதிய 100 வோல்ட் மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மோட்டார் கட்டுப்பாட்டுக் கருவி, பேட்டரி மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட முக்கிய பாகங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக இடவசதி, மேம்பட்ட வெப்ப மேலாண்மை, சீரான செயல்திறன் மற்றும் வேகமான சார்ஜிங் ஆகியவற்றை வழங்க முடியும் என்று அந்நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Ultraviolette Tessaract

ரேஞ்ச்

அல்ட்ராவயலெட் டெஸராக்ட் ஸ்கூட்டரில் 3.5kWh, 5kWh மற்றும் 6kWh என மூன்று பேட்டரி தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. ஐடிசி (IDC) கணக்கீடுகளின்படி, இந்த ஸ்கூட்டர் முறையே 162 கிமீ, 220 கிமீ மற்றும் 261 கிமீ வரை அதிகபட்சமாக ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மின்மோட்டார் அதிகபட்சமாக சுமார் 20 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 125 கி.மீ வேகத்தில் செல்லும் திறனும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர்நோவா (Supernova) சார்ஜரைப் பயன்படுத்தும்போது, பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே தேவைப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read

முக்கிய வசதிகள்

டெஸராக்ட் ஸ்கூட்டரில் 7 அங்குல டிஎஃப்டி (TFT) திரை, 14 அங்குல சக்கரங்கள், இரட்டை சேனல் ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், கேமராக்கள் மற்றும் ரேடார் அடிப்படையிலான எச்சரிக்கை வசதிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருக்கைக்கு அடியில் 34 லிட்டர் பொருட்கள் வைப்பதற்கான பூட்ஸ்பேஸ் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் இருக்கை, கால்களை வைக்கும் தளம் மற்றும் ஹேண்டில்பார் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஓட்டுபவருக்கும், பின்னால் அமர்ந்து பயணிப்பவருக்கும் மேம்பட்ட இட வசதியை வழங்குவதுடன், அன்றாடப் பயன்பாட்டுக்கும் ஏற்றதாக ஸ்கூட்டரை உருவாக்க நிறுவனம் முயற்சி செய்துள்ளது.

டெஸராக்ட் அறிமுகமானபோது முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.20 லட்சம், அடுத்த 50,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.30 லட்சம், அதன்பிறகு ரூ.1.45 லட்சம் என ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட விலையைப் பாதுகாப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி எப்போது?

டெஸராக்ட் ஸ்கூட்டருக்கான உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ஓசூர் அருகே சூளகிரியில் புதிய தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தையும் அல்ட்ராவயலெட் முன்னெடுத்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனையை அதிகரிப்பதற்கும், எதிர்காலத்தில் மாதந்தோறும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த உற்பத்தி ஆலை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Sunday, October 25, 2026, 12:03 [IST]
English summary
Ultraviolette tesseract electric scooter launch q1 2027 range price
மேலும்... #ultraviolette
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out