ஓலா, ஏத்தர் எல்லாம் ஜூன் மாதத்திற்கு பிறகு இருக்கும் இடம் தெரியாம போக போகுது! ரூ.5,000-இல் ஸ்கூட்டர் புக்கிங்!
அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனத்தில் இருந்து டெசெராக்ட் (Tesseract) என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) கடந்த 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது நினைவில் இருக்கிறதா? கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் (Bookings) கூட துவங்கப்பட்டது. ஆனால் அதன்பின் இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் தற்போது, அல்ட்ராவயலட் டெசெராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற ஜூன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 பிப்ரவரியில் வெளியீடு செய்யப்பட்ட போது டெசெராக்ட் ஸ்கூட்டர் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இதனால் இந்த இ-ஸ்கூட்டருக்கு குறுகிய நேரத்தில் அதிக முன்பதிவுகள் கிடைத்ததை அந்த நேரத்தில் பார்த்திருந்தோம்.

அதன்பின், கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியிலும் அல்ட்ராவயலட் டெசெராக்ட் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த அளவிற்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் இது அடுத்த மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவர இருப்பது, புக் செய்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும்.
2025 பிப்ரவரியில் வெளியீடு செய்யப்பட்ட போதே டெசெராக்ட்டின் ஆரம்ப விலை மட்டும் அறிவிக்கப்பட்டது. அல்ட்ராவயலட் நிறுவனம் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ரூ.1.45 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இது அப்போதைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஸ்கூட்டரின் அறிமுக சலுகை விலை ஆகும். அதாவது, ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும்போது விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

பெங்களூருவை சேர்ந்த அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் டெசெராக்ட் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப இந்த ஸ்கூட்டரை செயல்திறன்மிக்கதாக அல்ட்ராவயலட் உருவாக்கியுள்ளது. ஒரு 200சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான செயல்படுதிறனை வழங்கக்கூடியதாக டெசெராக்ட் இருக்கும் என்பது எங்களது கணிப்பு.
ஏனெனில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது அதிகப்பட்சமாக 20 எச்பி வரையிலான இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக, 0-இல் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை குறைந்தது 2.9 வினாடிகளில் எட்டிவிடலாம். அந்த அளவிற்கு பிக்-அப் டார்க் திறனை கொண்டுள்ள டெசெராக்ட் மொத்தம் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
அவையாவன, 3.5 kWh, 5 kWh மற்றும் 6 kWh என்பன ஆகும். இதில் 3.5 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 162கிமீ தொலைவிற்கும், 5 kWh பேட்டரியில் 220கிமீ தொலைவிற்கும், 6 kWh பேட்டரியில் 262கிமீ தொலைவிற்கும் 100% டூ 0% சார்ஜில் பயணிக்கலாம் என்கிறது அல்ட்ராவயலட் நிறுவனம்.
இந்த பேட்டரி ஆப்ஷன்களை பற்றி ஆராய்வதற்கு முன்னரே டெசெராக்ட்டின் தோற்றம் நம்மை வசீகரித்துவிடும். ஏனெனில் அந்த அளவிற்கு அதிக ஷார்ப்பான லைன்கள் உடன் ஸ்டைலிஷானதாக டெசெராக்ட் உள்ளது. பவர்ஃபுல்லான மோட்டார் உடன் உருவாக்கப்பட்டுள்ளதால், அதனை தாங்கக்கூடிய அளவிற்கு நன்கு பெரிய அளவிலான, மேக்ஸி-ஸ்கூட்டர் ஆக டெசெராக்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இருக்கைக்கு அடியில் 34 லிட்டர் கொள்ளளவில் நன்கு பெரிய அளவில் இடவசதியையும் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள், காற்றில் மிதப்பது போன்ற எஃபெக்ட்டில் டிஆர்எல்-கள் மற்றும் பெரிய அளவில் டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டைலான தோற்றம், மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளதால் அல்ட்ராவயலட் டெசெராக்ட் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், ஜூனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்படலாம்; 2025 பிப்ரவரி மாதத்திலேயே புக் செய்தவர்களுக்கு கவலையில்லை.


Click it and Unblock the Notifications