ஆகஸ்டில் அறிமுகமாகும் 4 புதிய பைக் & ஸ்கூட்டர்கள்.. பட்ஜெட் ஏத்தர் முதல் யமஹா ஆர்2 வரை!!

பண்டிகை கால சீசன் துவங்க இருக்கும் நிலையில், இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இனி மிகவும் பரபரப்பான மாதமாக இருக்கப் போகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் உயர் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரை பல புதிய இருச்சகர வாகன மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.

குறிப்பாக, மாஸ் மார்க்கெட்டை குறிவைத்து ஏத்தர் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்கூட்டர் மற்றும் யமஹாவின் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்த 4 புதிய மாடல்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Yamaha YZF R15

(Representative Image - Yamaha R15)

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்2 ஸ்போர்ட்ஸ் பைக்

ஸ்போர்ட்ஸ் பைக் ரசிகர்களின் ஆவலை தூண்டி இருக்கிரது யமஹா ஒய்இசட்எஃப் ஆர்2. சர்வதேச சந்தையில் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள இந்த நடுத்தர வகை எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் வரும் 27ந் தேதி இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான ஃபேரிங் பேனல்கள் கொண்ட முரட்டுத்தனமான வடிவமைப்பு, சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் கவாசாகி நின்ஜா மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ் வரிசை மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கிறது. ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சத்தில் வரலாம். யமஹா ஆர்15 மற்றும் யமஹா ஆர்3 பைக்குகளுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்படலாம். இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Bajaj Pulsar N160

(Representative Image - Current Bajaj Pulsar N160)

பஜாஜ் பல்சர் N160 4V

பஜாஜ் ஆட்டோ தனது மிகவும் பிரபலமான பல்சர் என்160 பைக்கின் 4-வால்வ் எஞ்சின் கொண்ட மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகி உள்ளது. தற்போதைய மாடலை விட அதிக செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சற்று ஸ்போர்ட்டியான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த புதிய மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 150-200 சிசி பிரிவில் போட்டி மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Ather El01 EV

ஏத்தர் EL01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

வரும் 29ந் தேதி இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த மாதத்தின் மிக முக்கிய அறிமுகங்களில் ஒன்றாகவே இதனை கூறலாம். ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் ஏத்தர் கம்யூனிட்டி டே நிகழ்ச்சியில் இந்த மாடல் அறிமுகமாகும் என நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய ஏத்தர் ஸ்கூட்டர்களைவிட குறைவான விலையில் அதிக வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட மாடலாக இருக்கும். புதிய EL பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்கூட்டர், எதிர்கால ஏத்தர் தயாரிப்புகளுக்கும் அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

E3 Trion

இ3 டிரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சந்தைக்கு புதிதாக வரும் இ3 எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வரும் 6ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. நகரப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சுமார் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் வரும் என தெரிகிறது. தினசரி அலுவலகம் செல்லுவோருக்கும், குடும்ப பயன்பாட்டையும் குறிவைத்து இது வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

முக்கிய அறிமுகங்கள்

இந்த ஆண்டு இந்திய இருசக்கர வாகன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கும் கணிசமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், இந்த மாதம் அறிமுகமாகும் மாடல்கள் வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளை குறிவைத்து வர இருக்கின்றன. ஒரு பக்கம் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மறுபக்கம் செயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் பைக்குகள் என அனைத்து தரப்பு வாங்குபவர்களுக்கும் புதிய தேர்வுகளாக இந்த புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Article Published On: Tuesday, August 4, 2026, 12:01 [IST]
English summary
Upcoming new bike scooter launches india august 2026
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X