விரைவில் அறிமுகமாகும் 5 புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மாதா மாதம் அதிகரித்து வருகிறது. டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் கலக்கி வருகின்றன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மவுசு எகிடுதகிடாக அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகின்றன.

வரும் ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் வர இருக்கும் இந்த புதிய மாடல்களானது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும், சில மாடல்களின் அறிமுகத்தை அந்தந்த நிறுவனங்களே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இன்னும் சில மாடல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அந்த 5 முக்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

EV Scooters

1. ஏத்தர் இஎல்

ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் Community Day நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த இருப்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளது. புதிய EL பிளாட்ஃபார்மில் உருவாகும் இந்த ஸ்கூட்டர், தற்போதைய 450 சீரிஸை விட அதிக வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பு, மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் போட்டித்தன்மை கொண்ட விலை ஆகியவற்றுடன் இந்த மாடல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2. ஹோண்டா க்யூசி3

ஹோண்டா தனது புதிய க்யூசி3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது. நகர்ப்புற பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில் கனெக்டட் தொழில்நுட்பம், நவீன வடிவமைப்பு மற்றும் தினசரி பயணத்திற்கு ஏற்ற அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. சிம்பிள் அரைவ் ஃபேமிலி ஸ்கூட்டர்

சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தனது புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் அரைவ் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 2ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. தினசரி அலுவலக பயணம் மற்றும் குடும்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மாடல், ஏத்தர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் போன்ற பிரபல ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது. எளிதான ஓட்டுதல், பெரிய இருக்கை மற்றும் நல்ல ரேஞ்ச் ஆகியவை இதன் முக்கிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. ஹீரோ விடா புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது விடா பிராண்டில் புதிய மற்றும் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அதிக விற்பனையை இலக்காகக் கொண்ட ஒரு புதிய மாடல் தயாராகி வருவதாக பல ஆட்டோமொபைல் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்கூட்டர் 3.8kWh பேட்டரியுடன் ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் வரலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இதன் பெயர், விலை அல்லது அறிமுக தேதி குறித்து ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனாலும், சந்தைப் போட்டியை மனதில் வைத்து விரைவில் இந்த புதிய மாடல் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. இ3 டிரியான்

பெங்களூரை சேர்ந்த E3 மொபிலிட்டி நிறுவனம் டிரியான் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 6ந் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரப்புற பயன்பாட்டை மையமாகக் கொண்ட இந்த மாடல் பழுது குறித்த தகவல்களை துல்லியமாக பெறக்கூடிய ஏஐ தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ரிவர் இண்டி ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விபரங்கள் வரும் ஆகஸ்ட் 6ந் தேதி எதிர்பார்க்கலாம்.

உங்களுக்கு உடனடியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவைப்பட்டால், தற்போது சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா, ஓலா எஸ்1 மற்றும் ஹீரோ விடா வி2 உள்ளிட்ட பல தேர்வுகள் ஏற்கனவே கிடைக்கின்றன. ஆனால், புதிய தொழில்நுட்பம், அதிக ரேஞ்ச் அல்லது புதிய வடிவமைப்புடன் முற்றிலும் புதிய மாடலை விரும்புபவர்களாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் காத்திருந்து வாங்கலாம். குறிப்பாக ஏத்தர் மற்றும் சிம்பிள் நிறுவனங்களின் புதிய மாடல்கள் சந்தையில் போட்டியை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை தற்போது மிகவும் வேகமாக மாறி வருகிறது. சந்தைப் போட்டி அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய டிசைன், அதிக ரேஞ்ச், தொழில்நுட்பம் மற்றும் விலை ஆகிய மூன்று அம்சங்களிலும் சிறப்பான தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்கு நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றன. தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து மாடல்களில், ஏத்தர் EL பிளாட்ஃபார்ம் ஸ்கூட்டர், ஹோண்டா QC3 மற்றும் சிம்பிள் அரைவ் ஆகியவற்றின் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஹீரோ விடா பிராண்டில் புதிய மாடல் மற்றும் E3 ட்ரையான் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வந்தால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு சிறந்ததாக அமையும்.

Article Published On: Tuesday, July 28, 2026, 9:24 [IST]
English summary
Upcoming new electric scooters india august september 2026
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out