புதிய ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ள நிறுவனம்.. ஆக்டிவா, அக்சஸுக்குப் போட்டியா?
இத்தாலியைச் சேர்ந்த ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பா, தங்களுடைய 80ம் ஆண்டைக் கொண்டாட 'டெக் 80th' (Tech 80th) என்ற புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மாடர்னான பிளாட்ஃபார்ம் மற்றும் அம்சங்களுடன், முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒரிஜினில் வெஸ்பா ஸ்கூட்டர் டிசைன் அம்சங்களுடன் இந்தப் புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவல்களை விரிவாக இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
1946-ல் தான் முதல் முதலாக வெஸ்பா பிராண்டு உருவாக்கிறது. இந்த ஆண்டுடன் அது தொடங்கப்பட்டு 80 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாகவே புதிய டெக் 80th சிறப்பு எடிஷன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 1946-ல் வெளியிடப்பட்ட ஸ்கூட்டரில் அப்போதைய கிளாஸியான டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதே ரெட்ரோ டிசைன் அம்சங்களை புதிய சிறப்பு எடிஷனிலும் வெஸ்பா பயன்படுத்தியிருக்கிறது.

புதிய டெக் 80th ஸ்கூட்டர் மாடலில் பார்த்தவுடன் நம் கண்களைப் பறிப்பது அதன் நிறம் தான். தனித்துவமான வெர்டே பேஸ்டலோ கிரீன் என்ற நிறத்தை இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரில் வெஸ்பா பயன்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமின்றி, ஸ்கூட்டர் முழுவதுமே இந்த நிறத்தாலேயே நிறைக்கப்பட்டிருக்கிறது. கிராப் ரெயில், மிரர்கள், ஸ்விட்ச்கியர், முன்பக்க சஸ்பென்ஷன் லிங்கேஜ் என அனைத்து பாகங்களிலுமே இந்த நிறத்தையே வெஸ்பா பயன்படுத்தியிருக்கிறது.
இதற்கு ஒற்றிருக்கும் வகையில் சீட், ஃபுட்ரெஸ்ட் இன்ஸர்ட்கள் மற்றும் ஹேண்டில் கிரிப்கள் ஆகியவற்றில் டார்க் கிரீன் எலமென்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரின் வீல்களும் 1946-ல் வெளியிடப்பட்ட ஒரிஜினல் வெஸ்பா ஸ்கூட்டரின் டிசைனை ஒற்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக ரெட்ரோ வைபை வெளிப்படுத்தும் கிளாஸியான ஸ்கூட்டராக இந்த சிறப்பு எடிஷன் மாடல் இருக்கிறது.

80ம் ஆண்டு கொண்டாட்டம் என்பதைக் குறிப்பிடும் வகையில் வெஸ்பா லோகோவுடன் 80 என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் இந்த ஸ்கூட்டரில் வெஸ்பா பொருத்தியிருக்கிறது. பின்பக்கம் 1946-ல் இருந்து என்பதையும் சேர்த்துக் குறிக்கும் வகையிலான பேட்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் '80 years of Vespa Est. 1946' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
மெக்கானிக்கலாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் தற்போதைய ஸ்கூட்டர் மாடல்களைப் போல மாடர்னாகவே இருக்கிறது இந்த சிறப்பு எடிஷன் மாடல். இதில் 125 சிசி மற்றும் 150 சிசி என இரண்டு இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 124.4 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினானது 9.5 hp பவர் மற்றும் 10.1 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
அதேபோல், 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினானது 11.4 hp பவர் மற்றும் 11.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த கிளாஸிான சிறப்பு எடிஷன் வெஸ்பா ஸ்கூட்டரின் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சத்திற்குள்ளான விலையில் இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரின் விலை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொஞ்சம் விலை அதிகமாக இருந்து விட்டாலும் இந்தியாவில் விற்பனையில் இருக்கக்கூடிய கிளாஸியான மற்றும் ப்ரீமியமான ஸ்கூட்டர்களில் வெஸ்பா ஸ்கூட்டர்களும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு எடிஷன் மாடலும் சற்றும் ப்ரீயம்னஸ் மற்றும் கிளாஸினஸ் குறையாமல் இருக்கிறது. பட்ஜெட் பிரச்சினையில்லை என்னும் வாடிக்கையாளர்கள் இந்த வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களையும் பரிசீலனை செய்யலாம். அனைத்து இடங்களிலும் சர்வீஸ் செண்டர் இல்லாதது இதனை வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய தடையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications